Tuesday, July 16, 2024
Homeராசிபலன்ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2024ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024-மகரம்

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024-மகரம்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

அனைவருக்கும் ASTROSIVA வின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!!

இந்த 2024 ஆம் வருடம் பிறக்கும் நேரமான 31.12.2023 நள்ளிரவு 12 மணிக்கு (மார்கழி மாதம் 15-ம் தேதி )மேஷத்தில் குரு, சிம்மத்தில் சந்திரன், கன்னியில் கேது, விருச்சகத்தில் புதன், சுக்கிரன்; தனுசில் சூரியன், செவ்வாய் ;கும்பத்தில் சனி, மீனத்தில் ராகு என்கின்ற கிரக அமைப்புகளில் புத்தாண்டு பிறக்கிறது.

உழைப்பிற்கு அஞ்சாத மகர ராசி அன்பர்களே!!! உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சுக்கிரனும், புதனும் நிற்கும் போது இந்த புத்தாண்டு பிறக்கிறது.

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024

சுபகாரியத் தடைகள் பரிபூரணமாக விலகும். வீட்டில் விசேஷங்கள் படிப்படியாக வர தொடங்கும். வாழ்க்கை துணையுடன் இருந்த வாக்குவாதம் தவிருங்கள். அவர்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். வீடு, மனை வாங்கும் சமயத்தில் பத்திரங்களை கவனமாக படித்துப் பாருங்கள். பூர்வீக சொத்தில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. சுப காரியங்கள் தொடர்ந்து வரும் போது செலவுகளும் சேர்ந்து வரும். வீணான ஆடம்பரமும் , வேண்டாத களியாட்டம் தவிருங்கள். வீண் சந்தேகம் வேண்டாத சஞ்சலம் தவிர்த்தாலே வீட்டில் நிம்மதி நிறையும். புரிந்து நடந்து கொள்ளுங்கள்.

பெண்களுக்கு மனம் போல் நன்மைகள் வர தொடங்கும். சுப காரியங்களுக்கு இப்போதே அஸ்திவாரம் இட்டு வைத்துக் கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்து சேரும். பெற்றவர்கள் மனம் கோணாமல் நடந்து கொண்டால் உங்கள் மனதுக்குப் பிடித்த மணவாழ்க்கை அமையும். குழந்தை பேருக்காக ஏங்குகிறவர்கள் குலதெய்வத்தை மனதார கும்பிட்டால் உங்கள் குலம் தழைக்கும்படி தாயாகும் பாக்கியம் உண்டாகும். வாரிசுகளை அன்போடு அரவணைத்துக் கொள்ளுங்கள். அதிகாரப் போக்கு யாரிடமும் வேண்டாம்.

சுணக்கங்கள் நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்க கூடிய ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும். இந்த சமயத்தில் வார்த்தைகளில் நிதானம் இருந்தால் வாழ்க்கையில் ஜெயித்து விடலாம். அலுவலகத்தில் அனுகூலமான சூழல் உருவாகும். உடன் இருப்பவர் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை தரும். முகஸ்துதி பாடும் நபர்களை உடனே ஒதுக்குவது அவசியம். முயற்சிகளை முடங்கச் செய்தால் முன்னேற்றம் முடங்கிவிடும். யாருக்காகவும் குறுக்கு வழி முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். தன்னம்பிக்கையை வளர்த்து தலைகனத்தை தவிர்த்தால் தலை நிமிர்ந்து நடக்கலாம்.

புத்தாண்டு பிறக்கும்போது குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் இனம் தெரியாத கவலைகள் வந்து போகும். தாயாருக்கு கை, கால் வலி ,சளி தொந்தரவு வந்து நீங்கும். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். செலுத்த வேண்டிய வரிகளை தாமதப்படுத்த வேண்டாம். சித்தர்களை சந்தித்து அருள் ஆசி பெறுவீர்கள். வாகன பயணத்தில் கவனம் தேவை. அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வழக்குகளில் அவசரம் கூடாது.

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024

குருபகவான் 01.05.2024 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டிலேயே தொடர்வதால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். வறண்டிருந்த பணப்பை கொஞ்சம் நிரம்ப ஆரம்பிக்கும். தடைப்பட்டு இருந்த காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

இந்த வருடம் முடிய உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 9-ல் கேதுவும் அமர்கிறார்கள். ராகு சஞ்சாரப்படி சொத்து வாங்குவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். சவால்களை சமாளிக்கும் மனோபலம் அதிகரிக்கும். நாடாளுபவர்களின் அன்பு கிடைக்கும். அடகில் இருந்த நகையை மீட்பீர்கள்.

9-ம் வீட்டில் கேது அமர்வதால் தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். அடி மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் எல்லாம் உங்கள் உதவியை நாடி வருவார்கள். வீடு மனை வாங்கும் திட்டம் நிறைவேறும்.

வருடம் முடியும் வரை பாத சனி தொடர்வதால் வீண் அலைச்சல் டென்ஷன் வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். எதிலும் அறிவுபூர்வமாக முன்னெடுக்க பாருங்கள். ஓய்வெடுக்காமல் உழைக்க வேண்டியவரும். மனதில் இனம் புரியாத கவலைகள் வந்து போகும். வீடு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். பணம் நகையை கவனமாக கையாளுங்கள்.

பலன்தரும் பரிகாரம்

ஒருமுறை காணிப்பாக்கம் சென்று கணபதியை வணங்கி விட்டு வாருங்கள் வருடம் முழுவதும் வாழ்க்கை வசந்தமாகும்

மொத்த பலன்: எதிலும் கவனம்

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்532அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்99குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்35நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்17ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular