Saturday, July 27, 2024
Homeஇன்றைய ராசி பலன்இன்றைக்கு அமைதியாக இருக்க வேண்டிய ராசிகள் : ராசி பலன் 27.12.2023

இன்றைக்கு அமைதியாக இருக்க வேண்டிய ராசிகள் : ராசி பலன் 27.12.2023

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

இன்றைய ராசி பலன்

மேஷம்

இன்றைய ராசி பலன்

புதிய நபரின் அறிமுகத்தால் புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலையில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமாக எதிர்பார்த்த வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும்.

ரிஷபம்

இன்றைய ராசி பலன்

உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பிள்ளைகளால் சிறு சிறு மனகஷ்டங்கள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்தன் மூலம் ஒருசில உதவிகள் கிடைக்கும். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.

மிதுனம்

இன்றைய ராசி பலன்

சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

கடகம்

இன்றைய ராசி பலன்

பூர்வீக சொத்துக்களால் வீண் அலைச்சல் உண்டாகும். எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சில தடங்கல்கள் ஏற்படலாம். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சிம்மம்

இன்றைய ராசி பலன்

வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன அமைதி பெறுவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.

கன்னி

இன்றைய ராசி பலன்

பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

துலாம்

இன்றைய ராசி பலன்

உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும் சூழ்நிலை ஏற்படலாம். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். எதிலும் கவனத்துடனும், சிக்கனத்துடனும் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். கடன் பிரச்சினை ஓரளவு தீரும்.

இதையும் கொஞ்சம் படிங்க : ஆங்கில புத்தாண்டு பலன்கள்- 2024

விருச்சிகம்

இன்றைய ராசி பலன்

மன உளைச்சல் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். வேலையில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். வெளியே பயணம் செல்லும் பொழுது அதிக கவனம் தேவை.

தனுசு

இன்றைய ராசி பலன்

குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்களின் பிரச்சினைகளுக்கு உறவினர்கள் பக்க பலமாக இருந்து உதவுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று குறையும்.

மகரம்

இன்றைய ராசி பலன்

சுபசெலவுகள் செய்ய கூடிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் புரிவோர் தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். கடன்கள் சற்று குறையும்.

கும்பம்

இன்றைய ராசி பலன்

உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மீனம்

இன்றைய ராசி பலன்

உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடல் நிலையில் கவனம் தேவை. அலுவலகத்தில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளை குறைக்கலாம். பணவரவு சுமாராக இருக்கும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்104ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular