Tuesday, April 30, 2024

Rasi Palan Today-20.11.2021

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

Rasi Palan Today-20.11.2021

Rasi Palan Today
Rasi Palan Today-20.11.2021

மேஷம்-Mesham 

பணிகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஆகலாம். நண்பரின் உதவியால் மாற்று வழிகளை பின்பற்றுவீர்கள். தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை உண்டு. புதிய வகையில் பணச்செலவு ஏற்படலாம். ஒவ்வாத உணவு உண்பதை தவிர்ப்பதால் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

ரிஷபம்-Rishabam 

அனைவரிடமும் இனிய வார்த்தை பேசுவீர்கள். உங்கள் மீதான நன்மதிப்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை பூர்த்தி செய்வீர்கள். உபரி பணவருமானம் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள்.

மிதுனம்-Mithunam 

இந்த நாளை பொறுத்தவரையில் வரவு வருவதற்கு முன்னமே செலவு வந்து உங்கள் வாயில் கதவை தட்டும். குருவின் பார்வை அதிக அளவில் ஆறுதல் அளிக்கும். சிலருக்கு மனைவியுடன் சிறு, சிறு பிரச்சனைகள் வந்து போக இடம் உண்டு. எனினும் நீங்கள் அமைதியாகவும், பொறுமையாகவும், இறை நம்பிக்கையுடனும் இருந்தால் இந்த நாளை இனிய நாளாக மாற்றலாம்.

கடகம்-Kadagam 

இன்றைய தினத்தில் சிலர் புதிய சொத்துக்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கப்பெறும். சிலர் வாகனங்களை மாற்றலாம் அல்லது அது சம்மந்தமாக சில செலவுகளை செய்யலாம். மற்றபடி உடலில் சோர்வு, அலுப்பு தென்படலாம். நெருப்பு, ஆயுதங்கள் போன்ற இவற்றை கையாளும் சமயத்திலும், வண்டி – வாகனங்களில் செல்லும் சமயத்திலும் கூடுதல் கவனம் தேவை. எப்படிப் பார்த்தாலும் இன்று ஒரு சுமாரான நாளாகவே உங்களுக்கு இருக்கும்.

சிம்மம்-Simmam 

இன்று அலைச்சல் இருந்தாலும் கூட காரிய வெற்றி உண்டு. பேச்சில் மட்டும் நிதானமாக இருந்தீர்கள் என்றால் வெற்றியை மகத்தான வெற்றியாக மாற்றலாம். உங்கள் தேவைகள் அவ்வப் போது நிறைவேறும். குரு பார்வை எப்படிப் பார்த்தாலும் உங்களுக்கு நன்மையை தான் செய்யும். மொத்தத்தில் இது ஒரு நல்ல நாள்.

கன்னி -Kanni

இன்று லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக் கிடையே ஒற்றுமை உண்டாகும்.

துலாம்-Thulam 

ஒருவித படபடப்பு வந்து செல்லும். தலைசுற்றல் முழங்கால் வலி வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் வாடிக் கையாளர்களால் மறைமுகப் பிரச்சினைகள் உருவாகும். உத்தியோகத்தில் சக ஊழியர் களுடன் பனிப்போர் வந்து நீங்கும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்-Viruchigam 

மனதில் வீண் குழப்பங்களுக்கு இடம் தர வேண்டாம். புதிய முயற்சி அலைச்சல் தந்தாலுமே இறுதியில் சாதகம் ஆகும். குல தெய்வ பிரார்த்தனைகளை சிலர் நிறைவேற்றுவீர்கள். தாய் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கலாம். உடல் நலனில் கவனம் தேவை. மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத் தான் இருக்கும். சக வியாபாரிகளால் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் கொடுக்கப் படலாம்.

தனுசு-Thanusu 

எந்த விஷயத்தையும் சவாலாக அணுகுவீர்கள். கடந்த காலத்தில் திகைப்பு தந்த பணி எளிதாக நிறைவேறும்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்தியளிக்கும். பணியாளர்கள் பாராட்டு வெகுமதி பெறுவர். மனைவி விரும்பிய பொருளை சிலர் வாங்கித் தரலாம். மொத்தத்தில் ஆடம்பரங்கள் இல்லாத ஒரு அமைதியான நாள்… இந்நாள்.

மகரம்-Magaram 

ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்கக் கூடும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. அரசு காரியங்கள் சற்றே சிலருக்கு இழுபறியாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எனினும், மேலதிகாரி ஆதரவு உண்டு. மொத்தத்தில், போராடி வெல்லும் நாள்.

கும்பம்-Kumabm 

பணவரவும் செலவுகளும் சமமாக இருக்கும் நாள். கேட்டிருந்த உதவிகள் கிடைக்கும். மாலையில் குடும்பத்துடன் உற்சாகமாகப் பேசி மகிழ்வீர்கள். எதிரிகள் பணிந்து போவார்கள். செய்யும் செயல்களில் சிறு சிறு தடைகள் உண்டாகலாம். எனினும் சமாளித்து விடுவீர்கள். உறவினர்களால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் மறையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும். மற்றபடி, சின்னச் சின்ன அலைச்சல்கள் இருந்தாலுமே உங்களது முயற்சி வீண் போகாது.

மீனம்-Meenam 

பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். புது நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பாராத வெற்றி கிடைக்கும் நாள்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்159ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19அற்புத ஆலயங்கள்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213சுபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10Gem Stone8பெருமாள் ஆலயங்கள்8கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2பங்குனி மாத ராசி பலன்கள்1ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231மார்ச் மாத ராசி பலன் 20241தை மாத பலன்கள்1horoscope1மாசி மாத பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மே மாத ராசிபலன்கள் -20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular