Friday, July 26, 2024
Homeஆன்மிக தகவல்மதுரை மாவட்டத்தில் உள்ள சித்தர்களின் ஜீவசமாதிகள்

மதுரை மாவட்டத்தில் உள்ள சித்தர்களின் ஜீவசமாதிகள்

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

 

மதுரை மாவட்டத்தில் உள்ள சித்தர்களின் ஜீவசமாதிகள்

நிஜானந்த சுவாமிகள்:
மதுரை – ராஜபாளையம் சாலையில் 40.கீ,மீ தூரத்தில் இருக்கும் டி,கல்லுப்பட்டியில் இறங்கி பேரையூரை அடைந்தால் அங்கு இவரது ஜீவசமாதி உள்ளது.
 
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
டி,கல்லுப்பட்டி (௮) பேரையூரில் இருந்து கூவலப்புரம்
 ( மதுரை மாவட்டம் )வந்தால் இவரது ஜீவசமாதி உள்ளது.
 
சங்கரானந்த சுவாமிகள்
டி,கல்லுப்பட்டி – விருதுநகர் சாலையில் அரசுப் பேருந்து ஏறி வி,ரெட்டிப்பட்டியில் இறங்கினால் அக்கிராமத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,
 
வெள்ளையா சுவாமிகள்
கருணானந்த சுவாமிகள்
மதுரை வடக்கு வெளி வீதியில் ( 315/94 கதவு இலக்கம் உள்ள ) சிம்மக்கல் பஸ் ஸ்டாப்பில் இவரது ஜீவசமாதி உள்ளது,
 
பழனி நாச்சிமுத்து சுவாமிகள்
சிவாநாராயண தேசிகர்
மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலைத்திற்கு அருகில் உள்ள புட்டுத்தோப்பு சிவன் கோயில் எதிர்புறத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,
 
சாது விவேகானந்த முனீஸ்வரர்
இவரது ஜீவசமாதி மதுரை குரு தியேட்டர் எதிரிலுள்ள மேட்டுத் தெரு கடைசியில் உள்ளது.இவரது ஜீவசமாதி இருக்குமிடத்தில் சீமைச் சுவாமி யோகி,பாலயோகி கணேஷ்பாபு ஆகியோரின் ஜீவசமாதிகளும் உள்ளது,
 
குழந்தை சுவாமிகள்
மதுரை பெரியார் பஸ் நிலையத்திற்கு கிழக்கில் நேதாஜி ரோடில் உச்சினி மாகாளி அம்மன் கோயில் எதிரில் உள்ள ஏழூர் சாலியர் சத்திரத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,
 
தலைவிரிச்சான் சுவாமிகள்
மதுரை தங்கம் தியேட்டர் அருகில் ( காக்கா தோப்பு )தலைவிரிச்சான் சந்தில் இவரது ஜீவசமாதி உள்ளது.
 
குட்டைய சுவாமிகள்
மதுரை தெற்கு வெளி வீதியில் இவரது ஜீவசமாதி உள்ளது,
விவேகானந்த சரஸ்வதி சுவாமிகள்
மதுரை ஆண்டாள்புரம் – மேம்பாலத்திற்கு அதாவது பெரியார் பஸ் நிலையத்திற்குத் தெற்கே பாலத்தின் கீழ் உள்ள மடத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,
 
சிவானந்த சுவாமிகள்                  
 விவேகானந்த சுவாமிகள் ஜீவசமாதி இருக்கும் மடத்தை ஒட்டி இவரது ஜீவசமாதி உள்ளது,
 
மூக்கன் சுவாமிகள்
மதுரை – திருப்பரங்குன்றம் சாலையில் தியாகராசர் கல்லூரி வளாகத்தின் கடைசியில் இவரது ஜீவசமாதி உள்ளது.
 
பிரமானந்த சுவாமிகள்
மதுரை ,அவனியாபுரம் மேம்பாலத்திற்குக் கீழ் இவரது ஜீவசமாதி உள்ளது,
 
ஓம் சிவப்பிரகாசர் சுவாமிகள்
மதுரை – திருப்பரங்குன்றம் சாலையில் தியாகராசர் கல்லூரிக்குச் செல்லும் பாதையின் ஆரம்பத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,
 
மூட்டை சுவாமிகள்
தியாகராசர் கல்லூரியை அடுத்து இருக்கும் காவல் நிலையத்தைக் கடந்து மாயாண்டி சுவாமிகள் சமாதிக் கோயிலுக்குச் செல்லும் வழியில் இவரது ஜீவசமாதி உள்ளது,
 
நடன கோபால நாயகி சுவாமிகள்
மதுரை – அழகர்கோயில் சாலையில் காதகிணறு என்னும் கிராமத்தில் ஜீவசமாதி ஆனார்,
 
கத்திரிக்காய் சித்தர்
மதுரையிலிருந்து19.கி,மீ தூரத்திலுள்ள திருப்புவனத்தில் அரசு மருத்துவமனை எதிர் சாலையின் மேல் இவரது ஜீவசமாதி உள்ளது,
 
அருளானந்த சித்தர்
மதுரையிலிருந்து 25.கி,மீ,தூரமுள்ள சோழவந்தானின் ஜனகை மாரியம்மன் கோயில் பின்புறமுள்ள ஜின்னி மடத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,
 
ஞானதேசிகர்
சோழவந்தான் ஜின்னி மடத்திற்கு அருகில் உள்ள ஞானியார் மடத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,
 
முனியாண்டி சுவாமிகள்
மதுரை – ராஜபாளையம் சாலையில் 28கி,மீ,தொலைவில் உள்ள டி,குன்னத்தூர் சென்று அங்கிருந்து அரை கி,மீ,தூரமுள்ள கே,ரங்கபாளையம் சென்றால் இவரது ஜீவசமாதி உள்ளது,
 
கமலானந்தர்
கே,ரங்கபாளையத்தில் வடக்குவாய் செல்லியம்மன் கோயில் அருகில் இவரது ஜீவசமாதி உள்ளது,
 
மௌனகுரு சுவாமிகள்
தேனியிலிருந்து 15.கி,மீ,தொலைவிலுள்ள பெரியகுளத்தில் வராகநதி பாலத்திலிருந்து அருள் தியேட்டர் செல்லும் வழியில் இவரது ஜீவசமாதி உள்ளது,
 
 பாட்டையா சுவாமிகள்
கருணையானந்த சுவாமிகள்
மதுரை – ஸ்ரீ வில்லிபுத்தூர் சாலையில் டி,கல்லுப்பட்டியி ல் இறங்கி அங்கிருந்து 7.கி,மீ தூரத்தில் உள்ள பேரையூர் வந்து பேரையூரிலிருந்து 2.கி,மீ தொலைவிலுள்ள சாளசந்தை கிராமம் சென்றால் இவரது ஜீவசமாதி உள்ளது,
 
சடையாண்டி ரெட்டியார் சுவாமிகள்
உசிலம்பட்டியிலிருந்து 36.கி,மீ,தூரத்தில் சாப்டூர் சென்று அங்கிருந்து 4 கி,மீ,வண்டல்பட்டி ஸ்டாப்பில் இறங்கி சிறிது தூரம் சென்றால் விட்டல்பட்டி கிராமத்தில் தெப்பஊரணி அருகில் இவரது ஜீவசமாதி உள்ளது,
 
தேசிக ஆனந்த சுவாமிகள்
மதுரையிலிருந்து உசிலம்பட்டி வந்து அங்கிருந்து ஏழுமலை செல்லும் சாலையிலுள்ள கோட்டைப்பட்டியில் இவரது ஜீவசமாதி உள்ளது,
இவரது பிரதான சீடர் குருநாத சுவாமியின் உடல் இவரது ஜீவசமாதிக்கு நேர் உள்ளது,
 
 குழந்தையானந்த சுவாமிகள்
இவரது ஜீவசமாதி நான்கு இடங்களில் உள்ளது.
முதன் முதலாக ஜீவசமாதி கொண்டது காசித் தலத்தில்,,இவருடைய ஜீவசமாதி இவருடைய குருநாதர் ஸ்ரீ கணபதி பாபவின் ஜீவசமாதிக்கு அருகில் உள்ளது,
இரண்டாவது,நேபாளத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ பசுபதிநாதர் ஆலயத்தில் உள்ளது,
மூன்றாவது,தமிழகத்தில் தென்காசிக்கு வந்து சன்னதி மடம் தெருவில் உள்ள சங்கரன் பிள்ளை என்பவரது வீட்டிற்குள் ஜீவசமாதி அடைந்தார்,இது நெல்லையப்பர் சமாதி என்று அழைக்கப்படுகிறது,
நான்காவது,மதுரை அரசடிப் பகுதியில் காளவாசல் பஸ் ஸ்டாப்புக்கு அருகில் உள்ளது,
 
நாகநாத சுவாமிகள்
மதுரை மேலூரிலிருந்துஏரியூர் செல்லும் பாதையில் உள்ள வடவன்பட்டியில் கிழக்கு எல்லையில் சாலைக்கு வடபுறமுள்ள ஊராட்சி மன்றக் கட்டடத்திற்கு நேர் எதிரில் தெற்கே இவரது ஜீவசமாதி உள்ளது,
 
இடைக்காடர்
இடைக்காட்டூர் மணிகண்டீஸ்வரர் கோயிலில் இவரது ஜீவசமாதி உள்ளது, மதுரை ( மாட்டுத்தாவணி) அல்லது மானாமதுரையிலிருந்து இங்கு வரலாம்,
 
சத்குரு
உசிலம்பட்டி- தேனி சாலையில் ஆண்டிப்பட்டியை அடுத்த எம்,சுப்பலாபுரம் என்னும் இடத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,
 
சிங்கம்புணரி வாத்தியார் சுவாமிகள்
முத்துவடுக நாத சுவாமிகள்
சிங்கம்புணரி பஸ் நிலையத்தின் அருகில் இவரது உள்ளது,
 
தங்கவேல் சுவாமிகள்
        (மற்றும்)
சுப்பையா சுவாமிகள்
மதுரை ஆரப்பாளையம் பஸ் நீலையத்திற்கு மேற்கே சிறிது தொலைவில் உள்ள வைகை நகர் அருகில் நெ,10.ஆரப்பாளையம் மெயின் ரோடு இந்த ஜீவசமாதிகள் இருக்கும் இடமாகும்,
 
மாதவ ஆனந்த சுவாமிகள்
இவரது ஜீவசமாதி ,80.டி,மீனாட்சி இல்லம் ,நேர் நகர் ,அழகப்பா நகர்,மதுரை -3.அழகப்பா நகர் ரயில்வே கேட் பஸ் ஸ்டாப்பில் இறங்கி அரை கி,மீ,தூரம் நடந்தால் இவரது ஜீவசமாதி உள்ளது,
 
ரமணகிரி சுவாமிகள்
மதுரையை அடுத்த வாடிப்பட்டியிலிருந்து 7.கி,மீ.தொலைவிலுள்ள குட்லாம்பட்டியில் இவரது ஜீவசமாதி உள்ளது, 
 
சுந்தரானந்த சுவாமிகள்
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலேயே ஜீவசமாதி அடைந்திருக்கிறார்,
 
மாயாண்டி சுவாமிகள்
மதுரை – திருப்பரங்குன்றம் சாலையில் தியாகராசர் இன்ஜினியரிங் காலேஜ் ஸ்டாப்பில் இறங்கி மலையடிவாரம் சென்றால்,இவரது ஜீவசமாதி உள்ளது,
 
சோமப்ப சுவாமிகள்
மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதி இருக்கும் இடத்திலிருந்து மலை மீது இருக்கும் முருகன் கோயிலுக்குச் செல்லும் வழியில் இவரது ஜீவசமாதி உள்ளது,
 
மச்சமுனி
இவரது ஜீவசமாதி திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது.
அங்குள்ள சுனையில் இன்றும் மீன் வடிவில் ஐயா வாழ்வதாக நம்பிக்கை உள்ளது.
 
சட்டை நாதர்
மதுரை மாவட்டம், சோழவந்தான்  அருகே திருவேடகம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது,
தகவல் உபயம் 
ஸ்ரீம்_மகேஷ்_சுவாமி_ஜீ     
 =========================
ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

3 COMMENTS

  1. கூவலப்புரம் சித்தரின் பெயர் சுந்தரமூர்த்தி சுவாமிகள்…

    சுந்திரசுவாமி என்பது தவறு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular