Friday, December 8, 2023
Homeஇன்றைய ராசி பலன்இன்றைய ராசி பலன்- 10.7.2021

இன்றைய ராசி பலன்- 10.7.2021

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

இன்றைய ராசி பலன்- 10.7.2021

 

மேஷம் 

இன்று பணத்தேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. குறிப்பாக உடன் இருப்பவர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்

ரிஷபம் 

பணிகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஆகலாம். நண்பரின் உதவியால் மாற்று வழிகளை பின்பற்றுவீர்கள். தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை உண்டு. புதிய வகையில் பணச்செலவு ஏற்படலாம். ஒவ்வாத உணவு உண்பதை தவிர்ப்பதால் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

மிதுனம் 

அனைவரிடமும் இனிய வார்த்தை பேசுவீர்கள். உங்கள் மீதான நன்மதிப்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை பூர்த்தி செய்வீர்கள். உபரி பணவருமானம் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள்.

இன்றைய ராசி பலன்

கடகம் 

இந்த நாளை பொறுத்தவரையில் வரவு வருவதற்கு முன்னமே செலவு வந்து உங்கள் வாயில் கதவை தட்டும். குருவின் பார்வை அதிக அளவில் ஆறுதல் அளிக்கும். சிலருக்கு மனைவியுடன் சிறு, சிறு பிரச்சனைகள் வந்து போக இடம் உண்டு. எனினும் நீங்கள் அமைதியாகவும், பொறுமையாகவும், இறை நம்பிக்கையுடனும் இருந்தால் இந்த நாளை இனிய நாளாக மாற்றலாம்.

சிம்மம் 

இன்றைய தினத்தில் சிலர் புதிய சொத்துக்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கப்பெறும். சிலர் வாகனங்களை மாற்றலாம் அல்லது அது சம்மந்தமாக சில செலவுகளை செய்யலாம். மற்றபடி உடலில் சோர்வு, அலுப்பு தென்படலாம். நெருப்பு, ஆயுதங்கள் போன்ற இவற்றை கையாளும் சமயத்திலும், வண்டி – வாகனங்களில் செல்லும் சமயத்திலும் கூடுதல் கவனம் தேவை. எப்படிப் பார்த்தாலும் இன்று ஒரு சுமாரான நாளாகவே உங்களுக்கு இருக்கும்.

கன்னி 

இன்று அலைச்சல் இருந்தாலும் கூட காரிய வெற்றி உண்டு. பேச்சில் மட்டும் நிதானமாக இருந்தீர்கள் என்றால் வெற்றியை மகத்தான வெற்றியாக மாற்றலாம். உங்கள் தேவைகள் அவ்வப் போது நிறைவேறும். குரு பார்வை எப்படிப் பார்த்தாலும் உங்களுக்கு நன்மையை தான் செய்யும். மொத்தத்தில் இது ஒரு நல்ல நாள்.

துலாம் 

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புது நட்பு மலரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைகள் உடைபடும் நாள்.

இன்றைய ராசி பலன்

விருச்சிகம் 

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

தனுசு 

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகளின் பிடிவாதப்போக்கு வருத்தம் தரும். குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படக்கூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் செலவுகள் அதிகரிப்பதால் சஞ்சலம் ஏற்படும்.

மகரம் 

இன்று சிலருக்கு வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்பட இடம் உண்டு. அதனால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவைப்படும் நாள். எவ்வளவு வேலை பளு இருந்தாலும் கூட நிதானமாக செயல்பட வேண்டும். ஆயுதங்கள், வாகனங்களை கையாளும் சமயத்தில் கூடுதல் கவனம் தேவை. சுமாரான நாள் தான். எனினும் குரு பார்வையால் தீமையில் இருந்து கடைசி நொடியில் காக்கப்படுவீர்கள்.

கும்பம் 

கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். விலகி சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

மீனம் 

கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கி தருவீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.

 

பஞ்சாங்க குறிப்புகள்-10.7.2021

தமிழ் தேதி /கிழமை/வருடம் ஆனி -26/  /5123 பிலவ
ஆங்கில நாள் 10.7.2021
இன்றய சிறப்பு வேலூர் சிப்பாய் கலகம் நடந்த தினம்
சூரியன் உதயம் 05.58AM
சூரியன் அஸ்தமனம் 06.36PM
ராகு காலம் காலை 9.00-10.30
நாள் நாள் முழுவதும் சம நோக்கு நாள்
 குறிப்புகள் ஏற்கனவே தொடங்கிய செயல்களை தொடர்ந்து செய்யலாம்
எம கண்டம் மதியம் 1.30-3.00
நல்ல நேரம் காலை 7.45-8.45|10.45-11.45|மாலை 4.45-5.45
திதி காலை 7.18 வரை அமாவாசை பின்பு பிரதமை
நட்சத்திரம் இரவு 12.14 திருவாதிரை பின்பு புனர்பூசம்
சந்திராஷ்டமம் கேட்டை,மூலம்
யோகம்  சித்த யோகம்
சூலம் கிழக்கு
பரிகாரம் தயிர்

 

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular