இன்றைய ராசி பலன்- 24.7.2021
மேஷம்
எந்த விஷயத்தையும் சவாலாக அணுகுவீர்கள். கடந்த காலத்தில் திகைப்பு தந்த பணி எளிதாக நிறைவேறும்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்தியளிக்கும். பணியாளர்கள் பாராட்டு வெகுமதி பெறுவர். மனைவி விரும்பிய பொருளை சிலர் வாங்கித் தரலாம். மொத்தத்தில் ஆடம்பரங்கள் இல்லாத ஒரு அமைதியான நாள்… இந்நாள்.
ரிஷபம்
வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிறுசிறு அவமானங்கள் ஏற்படக்கூடும். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டிவரும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்க இடம் தராதீர்கள். வேலைச்சுமை மிகுந்த நாள். எனினும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள்.
மிதுனம்
புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். சிலருக்கு மனதில் இனம் தெரியாத சோர்வு உண்டாகலாம். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். உடல்நலனில் கவனம் தேவை. பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பப் பெரியவர்களிடம் பேசும்போது பொறுமை மிக அவசியம். வியாபாரம் சற்று சுமாராகத் தான் இருக்கும். பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.
கடகம்
இன்று காலையில் மந்தமான நிலை காணப்பட்டாலும் கூட பிற்பகுதி உங்களுக்கு ஆறுதலாக உள்ளது. சிலருக்கு வயிறு உபாதைகள் ஏற்பட இடம் உண்டு. பலரை அனுசரித்து செல்ல வேண்டிய நாளாக இந்த நாள் இருக்கும். இது ஒரு சுமாரான நாள் தான்.
சிம்மம்
எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
கன்னி
எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துப் போகும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திடாதீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வர இடம் தராதீர்கள். குறிப்பாக யாருக்கும் உபதேசம் செய்யாதீர்கள். பிற்பகலுக்கு மேல் அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
துலாம்
கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். எனினும், முக்கியமான முடிவுகள் எதையும் இன்று எடுக்க வேண்டாம். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே நடைபெறும். உங்கள் முயற்சிகளுக்கு பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும். மொத்தத்தில் எப்படிப் பார்த்தாலும் இன்று ஒரு சுமாரான நாள் தான்.
விருச்சிகம்
இன்று எதிர்ப்புகள் அதிகரித்தாலும் சமாளித்து விடுவீர்கள். அரசு காரியங்கள் சிலருக்குத் தாமதம் ஆகலாம். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நாள். அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். பொறுமையாக இருந்து வெற்றி அடைய வேண்டிய நாள் இந்த நாள்.
தனுசு
உங்களிடம் உதவி பெற்றவர் நன்றி பாராட்டுவர். தொழில் வியாபாரம் செழிக்க அதிக நேரம் பணிபுரிவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். பெண்களால் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும்.
மகரம்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். புது முடிவுகள் எடுப்பீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நிம்மதியான நாள்.
கும்பம்
பெண்களுக்கு குடும்பத்தினரின் பாராட்டு கிடைக்கும். மாணவர்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெற்றி உண்டாகும். வெளிநாட்டில் இருப்பவர்கள் முயற்சி செய்தால் தாய் நாடு திரும்புவதற்கான வாய்ப்பு உண்டு.
மீனம்
கனவு இல்லம் நனவாகக் காண்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பேச்சில் நிதானம் தேவை. பெண்களுக்கு மாமனார், மாமியார் முக்கிய பொறுப்புகளை நம்பி ஒப்படைப்பார்கள். பணியாளர்களுக்கு மேலிடத்தில் சிறு அதிருப்தி தெரிவிக்கப்படும்.
பஞ்சாங்க குறிப்புகள் மற்றும் கிரக நிலைகள் -24.7.2021

தமிழ் தேதி /கிழமை/வருடம் | ஆடி -8/ சனி /5123 பிலவ |
ஆங்கில நாள் | 24.7.2021 |
இன்றய சிறப்பு | இன்று திருவோண விரதம் |
சூரியன் உதயம் | 05.58AM |
சூரியன் அஸ்தமனம் | 06.39PM |
ராகு காலம் | 09.00AM -10.30AM |
நாள் | மேல் நோக்கு நாள் |
குறிப்புகள் | ஏற்கனவே தொடங்கிய செயல்களை தொடர்ந்து செய்யலாம் |
எம கண்டம் | 1.30PM -3.00PM |
நல்ல நேரம் | காலை 7.45-8.45|மாலை 4.45-5.45 |
திதி | காலை 8.08 வரை பிரதமை |
நட்சத்திரம் | மதியம் 12.40 வரை உத்திராடம் |
சந்திராஷ்டமம் | மிதுன ராசி (24.07.2021 முதல் 25.07.2021)வரை |
யோகம் | சித்தயோகம் |
சூலம் | கிழக்கு |
பரிகாரம் | தயிர் |