Friday, March 29, 2024
Homeதசா புத்தி பலன்கள்சந்திர தசா புத்தி பலன்கள்

சந்திர தசா புத்தி பலன்கள்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

சந்திர தசா புத்தி பலன்கள்

சந்திர தசா- சந்திர புத்தி

சந்திர தசாவில்(Chandra dasa ) சந்திர புத்தி காலமானது 10 மாதங்களாகும்.

சந்திரன் ஆட்சி, உச்சம் பெற்று கேந்திர திரிகோணங்களில் இருந்தாலும், வளர்பிறைச் சந்திரனாக இருந்து 2, 11 ஆகிய ஸ்தானங்களில் அமைந்திருந்தாலும், நட்பு கிரக சேர்க்கை, பார்வை, சாரம் பெற்றிருந்தாலும், அரசாங்க வழியில் அனுகூலம், பெயர், புகழ் உயர கூடிய அமைப்பு, திருமண சுப காரியங்கள் நடைபெறும் யோகம், சிறப்பான புத்திர பாக்கியம் அமையும் வாய்ப்பு, பூமி, மனை, வண்டி வாகனம், ஆடை ஆபரண சேர்க்கையும் உண்டாகும். சந்திரனுக்கு குரு பார்வை இருந்தால் தொட்டதெல்லாம் துலங்கும்.

தேய்பிறை சந்திரனாகி பலமிழந்து பகை, நீசம் பெற்று பாவிகளின் சேர்க்கைப் பெற்றாலும், சர்ப கிரகங்களான ராகு, கேது சேர்க்கை பெற்றாலும், 6,8, 12 ஆகிய மறைவு ஸ்தானங்களில் இருந்தாலும், பண விரயங்கள், மனக்குழப்பங்கள், எதிலும் தெளிவாக செயல்பட முடியாத நிலை, மனதில் துக்கம், கவலை போன்றவற்றால் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். உற்றார்-உறவினர்களிடையே பகை, அரசு வழியில் தொல்லை, இடம் விட்டு இடம் செல்ல கூடிய சூழ்நிலை போன்றவை ஏற்படும்.

சந்திர தசா- செவ்வாய் புத்தி

சந்திர தசையில் (Chandra dasa ) செவ்வாய் புக்தி 7 மாதங்கள் நடைபெறும்.

செவ்வாய் பலம் பெற்று ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திர திரிகோணங்களில் அமையப் பெற்றிருந்தாலும், ஆட்சி, உச்சம் பெற்றிருந்தாலும், நட்பு கிரக சேர்க்கை, பார்வை, சாரம் பெற்றிருந்தாலும் எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் திறனும், வீரம், விவேகமும், எதிரிகளை வெல்லும் ஆற்றலும், பெயர், புகழ், உயர கூடிய வாய்ப்பும் உண்டாகும். குடும்பத்தில் பூமி, மனை சேர்க்கை, சகோதர வழியில் அனுகூலம், அரசாங்க வழியில் உயர் பதவிகள், விருதுகள் பெறும் வாய்ப்பு உண்டாகும். நெருப்பு மருந்து சம்பந்தப்பட்ட துறைகளில் லாபம் கிட்டும்.

செவ்வாய் வக்ரம், பகை, நீசமாகி, பாவிகள் சேர்க்கை, பார்வையுடன் 8, 12-ல் அமைந்திருந்தால் எதிர்பாராத விபத்துக்களை சந்திக்கும் நிலை, ரத்த காயம் ஏற்படும் நிலை, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம், எதிரிகளால் தொல்லை, மனதில் பயம், பண விரயம், வீடு ,மனை, பூமி, வண்டி வாகனங்களால் வீண் விரையம், சகோதரர்களிடையே ஒற்றுமையில்லாத நிலை, அரசாங்கத்திற்கு அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயம், தொழிலில் நலிவு, சொத்துக்களால் சேதம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும். குடும்ப வாழ்வில் பிரச்சனைகள் உண்டாகும்

சந்திர தசா புத்தி பலன்கள்

சந்திர தசா- ராகு புத்தி

சந்திர தசையில் (Chandra dasa ) ராகு புத்தி காலங்கள் 1வருடம் 6 மாதங்கள் ஆகும்.

ராகு சுபர் பார்வை சேர்க்கையுடன் 3, 6,10, 11-ம் வீடுகளில் அமைந்து சுபகிரக சம்பந்தம் பெற்றிருந்தாலும், ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தாலும் வியாதி இல்லாமல் நல்ல ஆரோக்கியம், எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கும் அமைப்பு, எதிர்பாராத பெரிய அளவில் பதவிகள் கிடைக்கப்பெற்று பெயர், புகழ், யாவும் உயரும் வாய்ப்பு உண்டாகும். எடுக்கும் காரியங்கள் யாவும் ஜெயமாகும், வண்டி, வாகனம் ஆடை ஆபரண சேர்க்கை கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் வாய்ப்புகளும் அமையும்.

ராகு 1,2,7,8 போன்ற இடங்களில் அமைந்தாலும், பாவிகளின் சேர்க்கை பார்வை பெற்று காணப்பட்டாலும், ராகு நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தாலும், உடல் நிலையில் பாதிப்பு, உண்ணும் உணவே விஷமாகக் கூடிய நிலை, வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், தந்தைக்கு கண்டம், பிரிவு, தாய்க்கு தோஷம், வியாதி, குடும்ப வாழ்வில் பிரிவு, பிரச்சனை ,தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் தவறான பழக்க வழக்கங்களுக்கு ஆளாக கூடிய நிலை, தோல் வியாதி, அரசாங்க வழியில் தண்டனையை அடையக் கூடிய நிலை போன்றவை உண்டாகி மன நிம்மதி குறையும்.

சந்திர தசா-குரு புத்தி

சந்திர தசாவில் குரு புத்தி காலங்கள் 1 வருடம் 4 மாதங்கள் ஆகும்.

குரு ஜனன காலத்தில் ஆட்சியோ உச்சமோ பெற்று இருந்தாலும், சந்திரனுக்கு கேந்திர திரிகோண ஸ்தானங்களில் இருந்தாலும்,2,11-ல் அமையப் பெற்றாலும், பொன் பொருள் சேர்க்கை, செல்வம், செல்வாக்கு உயரக் கூடிய யோகம், குடும்பத்தில் மகிழ்ச்சி, புத்திர வழியில் அனுகூலம், உடல் நிலையில் மேன்மை, வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகம், கல்வியில் உயர்வு உண்டாகும். மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பு, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும்.

குரு பலம் இழந்து வக்கிரம் பகை நீசமாகி லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ, 6, 8, 12-ல் காணப்பட்டால் தன விரயம், கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத சூழ்நிலை, நாணயக் குறைவு, அவமானம், அரசாங்கம் மூலம் எதிர்ப்புகள் உண்டாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபட இயலாத நிலை, குடும்பத்தில் கருத்து வேறுபாடு ,ஒற்றுமை குறைவு, தீராத வியாதி, கடன் தொல்லை, புத்திரர்களால் மன நிம்மதி குறைவு, பெரியவர்களின் சாபங்களுக்கு ஆளாக கூடிய நிலை, உற்றார்- உறவினர்களிடையே வீண் பிரச்சனைகள் ஏற்படும்.

சந்திர தசா புத்தி பலன்கள்

சந்திர தசா- சனி புத்தி

சந்திர தசாவில் சனி புத்தியானது 1வருடம் 7 மாதங்கள் நடைபெறும்.

சனி பலம் பெற்று அமையப் பெற்றால் உற்றார் உறவினர்களிடையே ஒற்றுமை, நல்ல ஆரோக்கியம் உண்டாகும். பொருளாதார மேன்மையால் சேமிப்பு பெருகும். எடுக்கும் காரியங்களில் வெற்றி. வேலையாட்களின் ஆதரவு, வண்டி வாகனங்கள் மற்றும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.

சனி பலமிழந்து வக்கிரம், பகை, நீசமாகி லக்னத்திற்கோ சந்திரனுக்கோ 8, 12-ல் இருந்தால் உடல் நிலையில் பாதிப்பு, நெருங்கியவர்களை இழக்க வேண்டிய அவலம், குடும்பத்தில் கலகம், வேலையாட்களால் பிரச்சனை, நெருங்கியவர்களே துரோகம் செய்யும் நிலை இருக்கும். இடத்தை மாற்ற வேண்டிய சூழ்நிலை, தேவையற்ற வம்பு வழக்குகள் உண்டாகும். எதிர்பாராத விபத்துக்களை சந்திக்க நேரிடும்.

சந்திர தசா- புதன் புத்தி

சந்திர தசாவில் புதன் புக்தியானது 1 வருடம் 5 மாதங்கள் நடைபெறும்.

புதன் பலம் பெற்று அமைந்திருந்தால் நல்ல வாக்கு சாதுர்யம், பேச்சாற்றல், எழுத்தாற்றல் போன்றவற்றால் மற்றவரை கவரக்கூடிய அமைப்பு, பொருளாதார மேன்மை, உற்றார் உறவினர்களின் ஆதரவு, கல்வியில் மேன்மை, கற்ற கல்வியால் உயர் பதவிகளை வகிக்கும் யோகம், புத்தி கூர்மை, பல வித்தைகளை கற்கும் ஆற்றல், மற்றவர்களால் மதிக்கப்படும் உன்னத அமைப்பு ஏற்படும்.

புதன் பலம் இழந்து வக்ரம், பகை, நீசமாகி லக்னத்திற்கோ சந்திரனுக்கோ 6, 8, 12-ல் இருந்தால் உற்றார் உறவினர்களிடமும், தாய்மாமன் வகையிலும் பகை, கல்வியில் மந்தநிலை, கற்ற கல்விக்கு தொடர்பில்லாத வேலை, ஞாபக சக்தி குறைவு, புத்திர பாக்கியம் உண்டாக தடை, வண்டி வாகனங்களால் வீண் விரயம் போன்றவை ஏற்பட்டு மனநிம்மதி குறையும்.

சந்திர தசா- கேது புத்தி

சந்திர தசாவில் கேது புத்தி காலங்கள் 7 மாதங்களாகும்.

கேது சுபர் பார்வை, சேர்க்கையுடன் பலம் பெற்றிருந்தால், நல்ல தெய்வீக சிந்தனை, பக்தி, பொருளாதார நிலையில் உயர்வு, அசையும் அசையா சொத்துக்களால் லாபம், மருத்துவம்-விஞ்ஞான துறைகளில் நாட்டம், மற்றவர்களால் மதிக்கப்படும் நிலை, அசையா சொத்துக்கள் சேரும் வாய்ப்புகள் ஏற்படும்.

கேது நின்ற வீட்டதிபதி பலவீனமாக இருந்தாலும், லக்னத்திற்கோ சந்திரனுக்கோ 8, 12-ல் அமைந்திருந்தாலும், பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தாலும் பயம், மனக்குழப்பம், எதிலும் முழுமையாக செயல்பட முடியாத நிலை, வயிற்று வலி, தோல் நோய்களால் பாதிப்பு, இல்லற வாழ்வில் ஈடுபாடற்ற நிலை, கணவன் மனைவி இடையே பிரிவு, புத்திர பாக்கியம் உண்டாக தடை, உறவினர்களிடையே பகை, எதிர்பாராத வீண் விரயங்கள், திருமணம் நடைபெற தடை, அரசு வழியில் தண்டனை, வம்பு வழக்குகளை சந்திக்கும் நிலை ஏற்படும்.

சந்திர தசா புத்தி பலன்கள்

சந்திர தசா- சுக்கிர புத்தி

சந்திர தசையில் சுக்கிர புக்தியானது 1 வருடம் 8 மாதங்கள் நடைபெறும்.

சுக்கிரன் பலம் பெற்று அமைந்திருந்தால் பெண்களால் அனுகூலம், செல்வச் சேர்க்கை, வீடு மனை பூமி மற்றும் ஆடை ஆபரண சேர்க்கை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம், நல்ல தூக்கம், கட்டில் சுகம், கலைத் தொழிலில் ஈடுபாடு, குடும்பத்தில் நவீன பொருட்கள் யாவும் சேரும் யோகம் உண்டாகும்.

சுக்கிரன் பலவீனமாக இருந்தால் மனதில் உற்சாகக் குறைவு, தேவையற்ற குழப்பம், மர்ம உறுப்புகளில் பாதிப்பு, தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாக கூடிய நிலை, கடன் பிரச்சனை வரும். பெண்களால் அவமானம், வீடு மனை வண்டி வாகனத்தால் வீண் விரயம், சுக வாழ்வை இழக்கும் நிலை ஏற்படும்.

சந்திர தசா- சூரிய புத்தி

சந்திர தசாவில் சூரிய புக்தியானது 6 மாத காலம் நடைபெறும்.

சூரியன் பலம் பெற்றிருந்தால் வீரம், விவேகம் கூடும். எடுக்கும் காரியங்களில் வெற்றி மேல் வெற்றி கிட்டும். தந்தைக்கு மேன்மை, தந்தை வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். அரசு வழியில் உயர் பதவிகள் கிட்டும். பெயர் புகழ் தேடி வரும். உறவினர்கள் உதவுவார்கள். ஆண் புத்திர பாக்கியம் அமையும். பொருளாதார நிலையும் உயர்வடையும்.

சூரியன் பலமிழந்திருந்தால் உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்கள், கண்களில் பாதிப்பு, இருதய கோளாறு, மஞ்சள் காமாலை, மூளை கோளாறு, தந்தைக்கு தோஷம் உண்டாகும். வண்டி வாகனங்களால் விபத்து, உடன் பிறந்தவர்களுடன் பிரச்சனை, கெட்ட சகவாசங்களால் அவமானம், அரசாங்கத்திற்கு அபராதம் கட்டும் சூழ்நிலை உண்டாகும்.

சந்திரனுக்குரிய பரிகாரம்:

திங்கள் கிழமைகளில் விரதம் இருத்தல் பவுர்ணமி நாட்களில் தேனும் சர்க்கரையும் கலந்து செப்பு பாத்திரத்தில் சந்திரனுக்கு படைத்தல், செம்பருத்தி பூவால் அர்ச்சனை செய்தல், திருப்பதி சென்று வெங்கடாஜலபதியை வழிபடுதல், சந்திரனின் அதிதேவதையான பார்வதியை திங்களன்று வணங்குதல், இரண்டு முகங்கள் கொண்ட ருத்ராட்சையை அணிதல், வெள்ளை நிற ஆடைகளை உபயோகித்தல் போன்றவை சந்திரனுக்கு செய்யும் பரிகாரங்கள் ஆகும்.

சந்திரனுக்குரிய கல்லான முத்தை உடலில் படும்படி அணிவது நல்லது.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்183இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்158ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்92அம்மன் ஆலயங்கள்62குரு பெயர்ச்சி பலன்கள்53108 திவ்ய தேசம்52பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19ராசிபலன்19அற்புத ஆலயங்கள்18தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சுபகிருது வருட பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3மார்கழி மாத ராசி பலன்கள்-20232ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2தை மாத பலன்கள்1மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231மாசி மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள் -20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular