Rasi Palan Today-15.08.2021

மேஷம்-Mesham
எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் மோதல்கள் வந்து நீங்கும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
ரிஷபம்-Rishabam
தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
மிதுனம்-Mithunam
இன்று காலையில் மந்தமான நிலை காணப்பட்டாலும் கூட பிற்பகுதி உங்களுக்கு ஆறுதலாக உள்ளது. சிலருக்கு வயிறு உபாதைகள் ஏற்பட இடம் உண்டு. பலரை அனுசரித்து செல்ல வேண்டிய நாளாக இந்த நாள் இருக்கும். இது ஒரு சுமாரான நாள் தான்.
கடகம்-Kadagam
எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
சிம்மம்-Simmam
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனால், திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வதுடன் பாராட்டவும் செய்வார்கள். வியாபாரத்தில் சற்று முன்னேற்ற மான சூழ்நிலை ஏற்படும்.
கன்னி -Kanni
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்திசெய்வீர்கள். சிலருக்குப் பணப் புழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாள் பிரார்த்தனையை சிலர் நிறை வேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.
துலாம்-Thulam
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும்
விருச்சிகம்-Viruchigam
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். சொத்து சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.
தனுசு-Thanusu
உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தை பெருக்குவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
மகரம்-Magaram
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்க மாவீர்கள். தைரியம் கூடும் நாள்.
கும்பம்-Kumabm
பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அமோகமான நாள்.
மீனம்-Meenam
புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். சிலருக்கு மனதில் இனம் தெரியாத சோர்வு உண்டாகலாம். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். உடல்நலனில் கவனம் தேவை. பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பப் பெரியவர்களிடம் பேசும்போது பொறுமை மிக அவசியம். வியாபாரம் சற்று சுமாராகத் தான் இருக்கும். பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.