Rasi Palan Today-17.08.2021

மேஷம்-Mesham
புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது சாதகமாக முடியும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டு சரியாகும். உறவினர்களுடன் பேசும் போது வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறு மையைக் கடைப்பிடிக்கவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத் தான் இருக்கும்.
ரிஷபம்-Rishabam
இன்று சிலருக்கு வாயுத் தொல்லைகள் வந்து போக இடம் உண்டு. மனம் அதிக சஞ்சலம் அடைந்து கொண்டே இருக்கும். எதிரிகளால் தொல்லை அதிகரிக்கும் நாள். இறை வழிபாடு மட்டுமே உங்களுக்கு நன்மையை செய்யும். மொத்தத்தில் இது அலைச்சல் மிகுந்த சுமாரான நாள் தான். பொறுமையுடன் காரியங்களை செயலாற்ற வேண்டும்.
பிரச்சினையை தீர்த்து வைக்கும் காஞ்சிபுரம்- ஓணகாந்தேஸ்வரர்
மிதுனம்-Mithunam
சவாலான விஷயங்களை சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.
கடகம்-Kadagam
கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் தயவு கிடைக்கப்பெறும். சோதனைகளைக் கடந்து இறுதியில் சாதிக்கும் நாள்.
சிம்மம்-Simmam
தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்த படி இருந்தாலும், பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத் தான் இருக்கும்.
கன்னி -Kanni
உத்வேகத்துடன் பணிபுரிவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். கூடுதல் லாப கிடைக்கும். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவர். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்
துலாம்-Thulam
உங்களின் நற்குணங்களை பலரும் அறிந்து கொள்வர். தொழிலில் திட்டமிட்ட பணிகளை அக்கறையுடன் நிறைவேற்றுவீர்கள். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். பெண்கள் நகை, புத்தாடை வாங்குவர். சிக்கலான விஷயங்கள் கூட இறுதியில் ஒரு நல்ல முடிவுக்கு வரும் தினம்.
விருச்சிகம்-Viruchigam
செயல்களில் திட்டமிடுதல் மிகவும் அவசியம். அதேபோல் செலவுகளிலும் சற்று கவனம் செலுத்துவது நல்லது. சிலருக்கு பிள்ளைகள் மூலம் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.
தனுசு-Thanusu
சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
மகரம்-Magaram
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம்- பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.
கும்பம்-Kumabm
வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். உறவினர், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக பிரச்னைகள் வந்துச் செல்லும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
மீனம்-Meenam
பழைய நிகழ்ச்சிகளை சிலர் அசை போடலாம். எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூரில் உள்ள கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக் கூடும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் சிலருக்குக் கிடைக்கும். பயணத்தின் போது உடைமைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ளவும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும்.