Rasi Palan Today-03.09.2021

மேஷம்-Mesham
இன்று சிலருக்கு கோபம், படபடப்பு வந்து போகும். ராம நாமம் சொல்லி வாருங்கள். சிறு பிரச்சனை கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் அதனால் அமைதியாகவும், பொறுமையாகவும் இருந்து வெற்றி காண வேண்டிய நாளாக இந்த நாள் உள்ளது. கணவன் – மனைவி இடையே கூட அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள் இந்த நாள். நிதானத்துடன் செயல் பட்டு காரியம் சாதிக்க வேண்டிய நாள்.
ரிஷபம்-Rishabam
அவமதித்து பேசியவரும் அன்பு பாராட்டுவர். தொழில் வளர்ச்சியால் புதிய சாதனை ஏற்படும். கூடுதல் பணவரவால் சேமிப்பு அதிகரிக்கும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.
மிதுனம்-Mithunam
மனதில் உற்சாகமும், செயல்களில் பரபரப்பும் காணப்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் யோசனையை வாழ்க்கைத் துணை ஏற்றுக் கொள்வார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.
கடகம்-Kadagam
இன்று சிலருக்கு வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்பட இடம் உண்டு. அதனால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவைப்படும் நாள். எவ்வளவு வேலை பளு இருந்தாலும் கூட நிதானமாக செயல்பட வேண்டும். ஆயுதங்கள், வாகனங்களை கையாளும் சமயத்தில் கூடுதல் கவனம் தேவை. சுமாரான நாள் தான். எனினும் குரு பார்வையால் தீமையில் இருந்து கடைசி நொடியில் காக்கப்படுவீர்கள்.
சிம்மம்-Simmam
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
கன்னி -Kanni
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
துலாம்-Thulam
பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்
விருச்சிகம்-Viruchigam
எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களால் மறைமுகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.
தனுசு-Thanusu
கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. முக்கிய கோப்புகளை அலட்சி யமாக கையாள வேண்டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நிதானம் தேவைப்படும் நாள்.
மகரம்-Magaram
சிலர் குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். கல்யாண முயற்சிகள் சிலருக்குப் பலிதமாகலாம். வியாபாரத்தை சிலர் பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சிலர் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். இன்னும் சிலருக்கு அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். இனிமையான நாள்.
கும்பம்-Kumabm
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்க மாவீர்கள். தைரியம் கூடும் நாள்.
மீனம்-Meenam
இன்றைய தினத்தில் உங்கள் தேவைகள் நல்ல விதங்களில் பூர்த்தியாகும். மகத்தான காரியங்களை இன்று நீங்கள் செய்து மகிழ்வீர்கள். அலைச்சல் இருந்தாலும் கூட முயற்சிகளுக்கு தக்க பலன் கிடைக்கப் பெறும். மொத்தத்தில் சோதனைகளை கடந்து சாதனை படைக்கும் நாள் இந்த நாள்.
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …