Rasi Palan Today-27.09.2021

மேஷம்-Mesham
கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கி தருவீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.
ரிஷபம்-Rishabam
குடும்பத்தினரின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த வருமானம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறும். தாயின் அன்பு, ஆசியை பெறுவீர்கள். சிலருக்குத் தாயார் வழியில் கூட சில உதவிகள் கிடைக்க இடம் உண்டு. எனினும், தாயாரின் உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்தவும். வண்டி. வாகனங்கள் தொடர்பாக சிலருக்கு செலவுகள் ஏற்படலாம்.
மிதுனம்-Mithunam
இன்றைய தினத்தில், எதிர்பார்ப்பு கூடுவதால் ஏமாற்றங்களுக்கு உள்ளாக வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி ஒற்றுமையில் சிறு சிறு பிணக்குகள் ஏற்பட்டாலும் இறுதியில் சரியாகும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும்.
கடகம்-Kadagam
வாழ்க்கைத் துணையின் வாழ்வில் மேன்மை உண்டு. உத்யோகத்தில் கூடுதல் கவனத்துடன் பணிபுரிவது நல்லது. வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு தாய்நாட்டிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் மிதமாக இருக்கும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். சிலர் தெய்வ காரியங்களில் ஈடுபட இடம் உண்டு.
சிம்மம்-Simmam
புதிய முயற்சிகளை கவனமாகச் செய்யவும். சிலருக்கு வீட்டில் தெய்வ வழிபாடுகளை நிகழ்த்தும் வாய்ப்பு ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல தகவல் சிலருக்கு கிடைகக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக் கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் நிதானத்துடன் ஈடுபடவும்.
கன்னி -Kanni
கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் மறைந்து மகிழ்ச்சியான சூழல் உருவாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மதிப்பு உயரும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.
துலாம்-Thulam
நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
விருச்சிகம்-Viruchigam
மனதில் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் தாமதமாகும். உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டாலும், அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத் தான் இருக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும்.
தனுசு-Thanusu
தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியில் செல்ல நேரிட்டால் நன்றாக திட்டமிட்டுக்கொண்டு கவனமாக செல்லவும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். எனினும், சமாளித்து விடுவீர்கள்.
மகரம்-Magaram
மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் சற்றுக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். போராடி வெல்வீர்கள்.
கும்பம்-Kumabm
இன்று காலையில் மந்தமான நிலை காணப்பட்டாலும் கூட பிற்பகுதி உங்களுக்கு ஆறுதலாக உள்ளது. சிலருக்கு வயிறு உபாதைகள் ஏற்பட இடம் உண்டு. பலரை அனுசரித்து செல்ல வேண்டிய நாளாக இந்த நாள் இருக்கும். இது ஒரு சுமாரான நாள் தான்.
மீனம்-Meenam
எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …