Thursday, May 23, 2024
Homeகுரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சியின் மூலம் ராஜயோகத்தை பெறப்போகும் 4ராசிகள் !!!

குரு பெயர்ச்சியின் மூலம் ராஜயோகத்தை பெறப்போகும் 4ராசிகள் !!!

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

குரு பெயர்ச்சி

வருடம் ஒருமுறை நடைபெறும் குரு பெயர்ச்சி இந்த ஆண்டு திருக்கணிதப்படி 22.04.2023 அன்று நடைபெறுகிறது. வாக்கிய பஞ்சாங்கத்தின் படி இரவு11:26-க்கு  மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த குரு பகவான், மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நுழைகிறார்.

இந்த குரு பெயர்ச்சியின் மூலம் மற்ற ராசிகளுக்கு ஓரளவு நன்மைகள் கிடைத்தாலும் நான் கீழே குறிப்பிடப்படுகின்ற மூன்று ராசிகள் மிக நன்மையான ராஜயோக பலன்களை அடையப்போகிறார்கள். அவை எந்த ராசிகள் என்பதை கீழே விரிவாக பார்க்கலாம்.

மிதுன ராசி

மிதுன ராசி அன்பர்கள் கடந்த சில வருடங்களாக படாத அவஸ்தை பட்டு இருப்பார்கள். என்னிடமே பல மிதுன ராசி நண்பர்கள் சொன்னது உண்டு. சிலருக்கு வேலை போயிருக்கும், சிலருக்கு வருமானம் போயிருக்கும், சிலருக்கு பழிச்சொல் வந்து சேர்ந்திருக்கும், சிலருக்கு குடும்பப் பிரச்சனை வந்திருக்கும்,சில தம்பதிகள் பிரிந்து போய் இருப்பார்கள், சிலர் நோய்வாய்ப்பட்டு வைத்திய செலவில் அதிக பணம் இழந்திருப்பார்கள், சில பேர் நிம்மதி இல்லாமல் துடித்திருப்பார்கள், இவ்வளவும்  நடந்தது மிதுன ராசி அன்பர்களுக்கு இருட்டான காலம்.

காரணம் 10-ல் குரு அவர் ஒரு இடத்தில் வைக்க மாட்டார். அஷ்டமத்தில் சனி சில திருமணங்கள் நிச்சயதார்த்தங்கள் அளவுக்கு சென்று கூட நின்று போனதை பார்த்திருக்கிறேன். எல்லா மிதுன ராசி அன்பர்களுக்கும் இப்படி நடந்திருக்குமா என்றால் நடந்திருக்காது. ஜாதக பலனும் தசா புத்திகளும் இறுக்கமாக இருந்தால் இந்த அஷ்டம சனியும், 10-ல் குருவும் படாதபாடு படுத்தி இருப்பார்கள்.

குரு பெயர்ச்சி

அப்படி கஷ்டப்பட்ட மிதுன ராசி அன்பர்களுக்கு இப்போது இரண்டு வகையாக நன்மை தரும் கோச்சார நடையை சந்திக்கிறார்கள். முதலாவதாக 10-லிருந்து லாபஸ்தானமான 11-ஆம் இடத்துக்கு குரு வருகிறார்.

மகரசனி விலகி பாக்கியஸ்தானத்திற்கு சென்றதால் அஸ்தம சனியின் கஷ்டங்கள் எல்லாம் குறைந்திருக்கும். மிதுன ராசி அன்பர்களுக்கு ஜனன ஜாதகம் மோசமாக இருந்தாலும் கூட இந்த கோச்சாரமானது ஓரளவுக்கு ஆறுதல் தரும் என்பதால் அதை பயன்படுத்திக் கொண்டு அவர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தால் தங்களுடைய கஷ்டங்களை சமாளித்துக் கொள்ளலாம். எந்த ஆதாயமும் இல்லாமல் நிராயுதபாணியாக கஷ்டங்களை சந்தித்தவர்களுக்கு இந்த கோச்சாரமானது ஒரு பலத்தை தந்திருக்கின்றது.

அந்த பலத்தை மனரீதியாக வளர்த்துக் கொண்டு நன்மைகளை பெருக்கிக் கொள்ளலாம். இந்த அடிப்படையில் மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி அதிரடி யோகங்களை அள்ளி தருவதாக அமையும்:உங்களை சாதனையாளர்களாக மற்றும்.

சிம்ம ராசி

சிம்ம ராசி அன்பர்களுக்கு 9-ம் இடத்துக்கு குரு பெயர்ச்சி நடக்கிறது. என்னதான் சிம்ம ராசி சூரியனுக்கு குரு நண்பராக இருந்தாலும் கூட அவர் அஷ்டமத்தில் இருக்கும் பொழுது விதிப்படி சில கஷ்டங்களை தந்தேதான் ஆக வேண்டும். அதே நேரத்தில் இப்பொழுது கண்டச்சனியும் கும்பத்தில் இருந்து சிம்ம ராசியை பார்ப்பதால் அவர்களுக்கு சிரமம் உண்டு.

இந்த சூழலில் மேஷத்தில் உள்ள குரு ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியை பார்க்கிறார். சுப கிரகங்களின் திரிகோண பலம்(1,5,9) என்பது மிக அற்புதமானது. சிம்மத்துக்கு 9-ல் குரு இருப்பதால் ஸ்தான பலம் அடைகின்றார். மேஷத்தில் இருந்து ஐந்தாம் பார்வையாக சிம்மத்தை பார்ப்பதால் பார்வை பலமும் கிடைக்கின்றது.

குரு பெயர்ச்சி

இதன் பலனாக சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும், “ஓயாத உழைத்தும் பயன் இல்லையே” என்ற புலம்பிய நீங்கள்? இனி உழைப்புக்கான பலனை அனுபவிப்பீர்கள். கையில் நாலு காசு தங்கும். வரும் குடும்பம் மற்றும் வெளிவட்டார நிகழ்வுகளில் முதல் மரியாதை கிடைக்கும். பணப்புழக்கம் அதிகமாகும் என்பதால் அடகில் இருந்து நகையை மீட்பீர்கள். வீடு,மனை வாங்கும் ஆசை நிறைவேறும். சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்தி கட்டுவார்கள். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி உங்களை ஓங்கி வளர வைப்பதுடன், எதிலும், எங்கும் வெற்றியை தருவதாக அமையும்.

துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களும் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு அர்த்தாஸ்டம சனி நடந்து கொண்டிருந்தது, 6-ல் குரு மறைந்து விரைய ஸ்தானத்தை பார்த்து பல அவஸ்தைகளை கொடுத்துக் கொண்டிருந்தார். இப்போது அந்த நிலை துலாம் ராசிக்காரர்களுக்கு மாறிவிட்டது. சற்று ஆரோக்கியம் கிடைத்திருக்கிறது.

வரும் குரு பெயர்ச்சியின் மூலமாக கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் ஆசையை பூர்த்தி செய்யும் அளவுக்கு பண வரவு அதிகரிக்கும். அவர்களால் உறவினர்கள் மத்தியில் பெருமை அடைவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வேலை கிடைக்கும். தடைபட்டிருந்த திருமணம் இனிதே கூடி வரும்.

குரு பெயர்ச்சி

உங்கள் ராசிக்கு 3 மற்றும் 6-க்கு உரியவரான குரு பகவான் 7-ம் வீட்டில் நுழைவதால் வாழ்க்கைத் துணை உடல் நிலையில் சிறிது அக்கறை தேவை.

மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி உங்களை வெற்றி பெற வைப்பதுடன் வருங்கால திட்டங்களை நிறைவேற்றித்  தருவதாகவும் அமையும்.

மீன ராசி

மீன ராசி அன்பர்களுக்கு குரு இதுவரையில் இருந்தது தனது சொந்த வீடு என்றாலும், அது ஜென்ம குரு அல்லவா! தன் கையே தன் கண்ணை குத்தி கொள்வது போல சில காரியங்களை செய்திருப்பார்கள். குரு இப்பொழுது தன் குடும்ப ஸ்தானத்துக்கு மாறியதால் ஒரு நிம்மதி.

குரு பெயர்ச்சி

குரு பகவான் உங்கள் ராசிக்கு தன வீடான 2-ம் வீட்டில் அமர்கிறார். மனப்போராட்டங்கள் நீங்கும். இதமான பேச்சாளல் சாதிப்பீர்கள். செலவுகளை சமாளிக்கும் வகையில் பண வரவு உண்டு. குடும்பஸ்தானத்தில் குரு அமர்வதால் வீட்டில் நிம்மதி உண்டாகும். பிரிந்தவர் ஒன்று சேர்வீர்கள். வரவேண்டிய பணம் எல்லாம் வந்து சேரும் என்பதால் வங்கியில் அடமானம் வைத்திருந்த வீட்டு பத்திரத்தை மீட்பீர்கள். உடன்பிறந்தவர்களுடன் கருத்து மோதல்கள் விலகும். தேக ஆரோக்கியம் பற்றிய வீண் பயம் விலகும்.

மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி பழைய சிக்கலில் இருந்து உங்களை விடுவிப்பதுடன் மாறுபட்ட அணுகுமுறையால் எதையும் சாதித்துக் காட்டும் வல்லமையை பெற்றுத் தருவதாக அமையும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்160ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்33பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19தசா புத்தி பலன்கள்19அற்புத ஆலயங்கள்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சுபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular