- Advertisement -
புத்தாண்டு பலன்கள்-2022-கன்னி
(உத்திரம்2,3,4-ஆம் பாதங்கள்,அஸ்தம்,சித்திரை1,2-ஆம் பாதங்கள்)
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே , எவ்வளவு அவசரமாக வேலை இருந்தாலும் பரபரப்பு இல்லாமல் சூழ்நிலைக்குத் தக்கவாறு நடந்துகொள்ளும் உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
- 2022 – ஆம் ஆண்டில் உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகமான சனிபகவான் இவ்வாண்டு உங்கள் ராசிக்கு 5 – ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும்.
- எதிலும் சிறப்பாக செயல்பட்டு படிப்படியான முன்னேற்றங்களை அடைவீர்கள்.
- தொழில் , வியாபாரத்தில் பல புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள்.
- கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் அபிவிருத்தி பெருகும்.
- உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருப்பதால் எல்லா பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்கமுடியும்.
- எதிர்பார்க்கும் உயர்பதவிகளும் , இடமாற்றங்களும் கிடைக்கும்.
- 13-4-2022 வரை குரு 6 – ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் , இவ்வாண்டில் முதல் மூன்று மாதங்கள் மட்டும் நீங்கள் சற்று பொறுமையுடன் இருக்கவும்.
- பணவரவுகளில் ஏற்ற இறக்கம் இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது.
- 13-4-2022 முதல் உங்கள் ராசிக்கு 7 – ல் குரு சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும்.
- பொருளாதாரநிலை மிகவும் சிறப்பாக இருப்பது மட்டுமின்றி நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும் காலமாக இருக்கும்.
- சிலருக்கு சொந்த வீடு , மனை , வாகனங் கள் போன்றவற்றை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும்.
- குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும் , மணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும்.
- புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
- பூர்வீகச் சொத்துகளால் ஒரு சிலருக்கு ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும்.
- உற்றார் – உறவினர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும்.
- கொடுக்கல் வாங்கல் சரளமாக அமைவது மட்டுமின்றி பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை அடையமுடியும்.
- பல பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும்.
- ஆன்மிகதெய்வீக காரியங்களுக்காகப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
- உங்கள் ராசிக்கு 3 , 9 – ல் சஞ்சரிக்கும் கேது , ராகு வரும் 12-4-2022 – ல் ஏற்படவுள்ள ராகு- கேது மாற்றத்தின்மூலம் கேது ஜென்ம ராசிக்கு 2 – லும் , ராகு 8 – லும் சஞ்சாரம் செய்ய இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்வது,நேரத்திற்கு உணவு உண்பது , தேவையற்ற அலைச்சல்களைக் குறைத்துக்கொள்வது நல்லது.
- கணவன்- மனைவியிடையே பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். குடும்ப விவகாரங்களைப் பிறரிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும்.
- திருக்கணிதப்படி உங்கள் ராசிக்கு 5 – ல் சஞ்சரிக்கும் சனிபகவான் அதிசாரமாக 29-4-202 முதல் 12-7-2022 வரை ருண , ரோக ஸ்தானமான 6 – ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் இக்காலங்களில் மிகவும் அனுகூலமான பலனை அடையும் யோகம் உண்டாகும்.
- Advertisement -