- Advertisement -
புத்தாண்டுபலன்கள்-2022-விருச்சிகம்
(விசாகம்4-ஆம் பாதம் ,அனுஷம்,கேட்டை )
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே , குறும்புத் தனமும் , விஷமத்தனமும் அதிகம் கொண்டவராக இருந்தாலும் , பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்ளும் பண்பு கொண்ட உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
- 2022 – ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு 3 – ஆம் வீட்டில் சனி வலுவாக சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும் .
- எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் , எதிலும் துணிந்து செயல்படக்கூடிய ஆற்றலும் உண்டாகும்.எல்லா வகையிலும் அனுகூலமான பலன்கள் ஏற்படுவதால் உங்களுக்கு பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருந்து குடும்பத்தேவைகள் அனைத்தையும் தடையின்றி பூர்த்தி செய்யமுடியும்.
- 2022 – ல் ஆண்டுத் தொடக்கத்தில் குரு பகவான் ராசிக்கு 4 – ல் சஞ்சரிப்பதும் , ஜென்ம ராசியில் கேது 7-ல் ராகு சஞ்சரிப்பதும் சற்று சுமாரான அமைப்பு என்பதால் சிறுசிறு தடைகளை எதிர்கொள்ள நேரிட்டாலும் , 13-4-2022 முதல் குரு உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5 – ல் சஞ்சாரம் செய்ய இருப்பதும் , 12-4-2022 – ல் ஏற்படவுள்ள சர்ப்பகிரக மாற்றத்தின் மூலம் உங்கள் ராசிக்கு ராகு 6 – ஆம் வீட்டிலும் , கேது 12 – ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் , ஏப்ரலுக்குப் பிறகு நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும் காலமாக இருக்கும்.
- திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்களுக்கான முயற்சிகள் தடையின்றி கைகூடி தக்க சமயத்தில் நடைபெறும்.
- சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.
- புத்திர வழியில் மகிழ்ச்சியளிக்கும் நிகழச்சிகள் நடைபெறும்.
- தற்போது உள்ள குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக விலகி கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
- தொழில் , வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும்.வெளியூர் , வெளிநாடு மூலம் அனுகூலம் கிட்டும் .
- கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிப்பதாக
- அமையும்.
- புதிய யுத்திகளைக் கையாண்டு தொழிலை விரிவுசெய்யும் நோக்கம் நிறை வேறும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் அனைத்தும் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் அடைவீர்கள்.
- உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும் புதியவேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கைத் தரம் உயர்வடையும்.
- உறவினர்களின் அசையும் அசையா சொத்துகளை வாங்கி சேர்ப்பிர்கள் உற்றார் ஆதரவு பகிழ்ச்சியினை அளிக்கும்.
- புரிந்துகொள்ளாமல் பிரிந்து சென்றவர்களும் தேடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள்.
- கொடுக்கல் வாங்கலில் சரளமானநிலை இருக்கும்.
- கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள்.
- பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும்.
- திருக்கணிதப்படி உங்கள் ராசிக்கு 3 – ல் சஞ்சரிக்கும் சனிபகவான் அதிசாரமாக வரும் 29- 4-2022 முதல் 12-7-2022 வரை சுக ஸ்தானமான 4 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்தாலும் . குரு , ராகு சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் எதையும் எதிர்கொண்டு வளமான பலன்களைப் பெறுவீர்கள் .
- Advertisement -