Friday, December 1, 2023

Rasi Palan Today-23.01.2022

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

Rasi Palan Today-23.01.2022

மேஷம்-Mesham 

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புதிதாக ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள்.உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நல்ல மாற்றங்கள் ஏற்படும் நாள்.

ரிஷபம்-Rishabam 

சகோதர வகையில் நன்மை உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மிதுனம்-Mithunam 

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை திட்டுவீர்கள். உத்தியோகத்தில் சாவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

கடகம்-Kadagam 

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் அறிவுரைப்படி செயல்படு வார்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் விஷயத்தில் சிந்தித்து ஈடுபடவும்.

சிம்மம்-Simmam 

எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக் கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை மறுப்பின்றி வாங் கித் தருவார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார் கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

கன்னி -Kanni

உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். உறவினர் முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக் கழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

image 27 Rasi Palan Today-23.01.2022
Rasi Palan Today-23.01.2022

துலாம்-Thulam 

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நன்மை நடக்கும் நாள்.

விருச்சிகம்-Viruchigam 

பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.

தனுசு-Thanusu 

சமயோசிதமாகவும் சாதுரியமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும் வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.அமோகமான நாள்.

மகரம்-Magaram 

கம்பீரமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசியல் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியமுடன் செயல்படும் நாள்.

கும்பம்-Kumabm 

வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

மீனம்-Meenam 

பழைய பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மன திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular