Friday, July 26, 2024
Homeகுரு பெயர்ச்சி பலன்கள்குருபெயர்ச்சி பலன்கள்-துலாம்

குருபெயர்ச்சி பலன்கள்-துலாம்

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

குருபெயர்ச்சி பலன்கள்-துலாம் 

சுக்கிர பகவானின் துலாம் ராசி அன்பர்களே!!!

இதுவரை 5-ஆம் வீட்டில் அமர்ந்திருந்த குரு பகவான் 13.04.2022 அன்று உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான மீன ராசியில் பிரவேசிக்கிறார்.

ஆறாம் இடம் என்பது ரோகஸ்தானம் ஆகும். இதனை சத்ரு ஸ்தானம் என்றும் சொல்லலாம். வியாதிகளையும் அதனால் உண்டாகும் பாதிப்புகளையும், விரோதிகளையும் அவர்களால் உண்டாகும் தொல்லைகளையும் இந்த இடத்தின் மூலம் அறியலாம்.

ரோகஸ்தானமான 6-ஆம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் போது உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகும். தொற்று நோய்களாலும், பாரம்பரிய உபாதைகளும், முழங்கால், வயிறு, கருப்பை, மாதவிடாய் கோளாறு, சிறுநீரக பாதிப்பு போன்றவை தலைதூக்கும். பணவரவிலும் தடை உண்டாகும். அனைவரிடமும் எச்சரிக்கையுடன் பழகவேண்டும்.

செய்தொழிலில் முதலீடுகள் அதிகரிக்குமே ஒழிய வருமானம் போதிய அளவில் இருக்காது. கடன் தொல்லையால் மனம் கலங்க நேரும். வரவை விட செலவு பல மடங்கு அதிகரிக்கும். மனம் எதையோ இழந்தது போல எதிலும் நாட்டம் இல்லாமல் போகும். எந்த இடத்திற்கு சென்றாலும் அங்கே போட்டியாளர்களும் விரோதிகளும் உண்டாவார்கள். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு அடிக்கடி தோன்றும். உறவினர்களும் நண்பர்களும் கூட பகை ஆவர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கை அமையும் என்றாலும் அவர்களும் சுயநலக்காரர்களாக இருப்பார்கள். குறுக்கு வழியில் செல்ல நினைப்பு வரும் அதனால் தொல்லைகளும் அவமானங்களும் உண்டாகும். ஆறாம் இடத்தில் அமரும் குருபகவான் மேற்கண்ட பலன்களை வழங்க கூடியவராக இருக்கிறார்.

ஆறாம் இடத்தில் அமரும் குரு பகவான் அங்கிருந்து 5, 7 9-ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டையும் 12-ம் வீட்டையும் இரண்டாம் வீட்டையும் பார்வையிட இருக்கிறார். இதனால் அந்த இடம் எல்லாம் சிறப்பு அடைய போகிறது.

குருபெயர்ச்சி பலன்கள்
குருவின் 5ம் பார்வை பலன் 

தனது ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டை பார்வையிடும் குரு பகவான் நீங்கள் செய்யும் தொழிலில் அபிவிருத்தி உண்டாக்குவார். அரசியல்வாதிகளுக்கு பட்டம்,பதவி என்று யோகம் காண வைப்பார். புதுப்புது யோசனைகளை மனதில் உண்டாக்கி செயல்பட வைப்பார். அழைப்புகளை அதிகரித்துக் கொள்வதற்கான வழிவகைகளை வழங்குவார். புனிதப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் சிலருக்கு உண்டாக்குவார். நிலம் வாங்குதல்,வீடு கட்டுதல், என்று உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவது ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி அடைய முடியும். நெருப்பினால் பாதிப்பு உண்டாக வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

குருவின் 7ம் பார்வை பலன் 

ஏழாம் பார்வையாக உங்கள் ராசிக்கு 12ம் வீட்டை பார்வையிடும் குரு பகவான் வரவுக்கு மீறிய செலவுகளை உண்டாக்குவார். இயந்திர தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் தொழிலில் புதுப்பிப்பு பணியை மேற்கொள்ள வைப்பார். புதிய வாகனம் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டாகும். அலைச்சல் அதிகரித்து அதனால் உடல் நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும். பொருளை விற்று சுப நிகழ்ச்சிகள் நடத்திக் கொள்ளும் வாய்ப்பையும், வீடுகட்டி குடிபோகும் வாய்ப்பையும் வழங்குவார். அரசாங்க விவகாரத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

குருபெயர்ச்சி பலன்கள்
குருவின் 9ம் பார்வை பலன் 

ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசிக்கு 2ம் வீட்டை பார்வையிடும் குரு பகவான் குடும்பத்தில் ஒற்றுமையை உண்டாக்குவார். குடும்பத்தினரின் வார்த்தைக்கு மதிப்பு அளித்து வாழ வேண்டிய நிலையை உருவாக்குவார். குடும்பத்தின் தேவையை உணர்ந்து அதை நிறைவேற்றுவீர்கள். கல்வி கற்போர் மேன்மையான பலன்களை அடைய வைப்பார். உங்கள் அறிவு பலப்பட்டு அதன் மூலம் அதிர்ஷ்டம் உண்டாகும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரித்து போக சுகத்தில் திளைக்க வைப்பார். பூமி வகையில் ஆதாயம் உண்டாகும். பயணத்தால் அனுகூலம் மகிழ்ச்சியும் கிட்டும். கண்களில் இருந்த கோளாறு அகன்று பார்வை பலம் அடையும். உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும்.

பலன் தரும் பரிகாரம் 

திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி தர்ப்பாரண்யேஸ்வரரை அர்ச்சித்து வணங்கி வாருங்கள்.

சனிக்கிழமைகளில் பசுமாட்டுக்கு அகத்திக்கீரை வழங்குங்கள் உங்கள் வாழ்க்கை சிறப்பாகும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular