Friday, July 26, 2024
Homeகுரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சி பலன்கள் -மீனம்

குரு பெயர்ச்சி பலன்கள் -மீனம்

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

குரு பெயர்ச்சி பலன்கள் -மீனம் 

இதுவரை உங்கள் ராசிக்கு பனிரெண்டில் இருந்த குரு பகவான் 13.4.2022 அன்று உங்கள் ஜென்ம ராசியான மீன ராசிக்கு வர இருக்கிறார்.

ஜென்ம குரு 

ஜென்மத்திற்கு வரும் குரு பகவான் வாழ்க்கை நிலையைத் தடுமாறச் செய்வார். சிந்தனையை மழுங்கடிப்பார். தொழிலில் மந்த நிலையை உண்டாக்குவார்.வருமானம் குறையும். பொருள் பல வழிகளிலும் போய்விடும். விரோதிகளின் தொல்லை மிகும்.

குரு பகவான் அவர் பார்க்கும் இடங்களை மேன்மையடைய வைப்பார் . ஜென்மத்தில் அமர்ந்து அங்கிருந்து ஐந்து , ஏழு , ஒன்பதாம் வீடுகளைப் பார்வையிட இருக்கிறார். இதனால் அந்த இடமெல்லாம் சிறப்படைய போகிறது. பொதுவாக குருவின் பார்வைக்குத்தான் பலன் , அவர் பார்க்கும் இடங்கள் எல்லாம் செழிப்படையும் , அங்கே பகை பெற்ற கிரகங்கள் இருந்தாலும் அவை பலமிழந்து போகும்.

image 6 குரு பெயர்ச்சி பலன்கள் -மீனம்
குருவின் 5ம் பார்வை பலன் 

தனது ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்க்கிறார் என்பதால் முதலில் உங்கள் மனநிலையும் உடல்நிலையும் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் இருந்து வந்த சிரமங்கள் அகன்று சுமூகமான நிலை உருவாவதுடன் சிலருக்கு பதவிஉயர்வும் , சம்பள உயர்வும் உண்டாகும். மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். சுய தொழில் புரிவோர் தொழிலில் முன்னேற்றத்தையும் லாபத்தையும் காண்பர். இதுநாள் வரை குழந்தை பாக்கியம் இல்லாமல் மனக்கவலையுடன் வாழ்ந்து வந்தவர்களின் கவலை தீரும். பிள்ளைகளால் நன்மையுண்டாகும். அவர்களின் எதிர்காலத்திற்கு வேண்டியவற்றை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். ஒரு சிலருக்கு இடம் வாங்கும் யோகமும் புது வீடு வாங்கும் யோகமும் உண்டாகும்.

குருவின் 7ம் பார்வை பலன் 

தனது ஏழாம் பார்வையாக உங்கள் ராசிக்கு ஏழாம் இடமாகிய களத்திர ஸ்தானத்தைப் பார்க்கிறார் என்பதால் திருமண வயது வந்தும் மண வாழ்க்கை அமையவில்லையே என்று மனம் வருந்திக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த ஆண்டில்அதற்குரிய யோகம் உண்டாகப் போகிறது. ஒரு சிலருக்கு காதலித்தவரே துணையாகலாம்.ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.எதிர்பாலினரால் அதிக உதவி உண்டாகும் காலமாக இருக்கும். தொழில் தொடங்க நினைத்தவர்களுக்கு அதற்கான உதவியும் ஆதரவும் இருக்கும். சிறிய முயற்சியும் பெரிய அளவில் ஆதாயம் தரக்கூடியதாக அமையும். வழக்குகள் சாதகமாகும் . பிரயாணம் லாபத்தை உண்டாக்கும்.

குரு பெயர்ச்சி பலன்கள் -மீனம்
குருவின் 9ம் பார்வை பலன் 

தனது ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடமாகிய பிதுர் , பாக்கிய தர்மஸ்தானத்தைப் பார்க்கிறார் என்பதால் , தேக நலனில் இருந்த பாதிப்புகள் அகலும் , மனதில் தெம்பும் தன்னம்பிக்கையும் உண்டாகும். தந்தையால் லாபம் உண்டாகும்.பழைய பிரச்னைகள் தீரும் . வழக்குகளில் வெற்றி உண்டாகும்.திருமணம் தடைபட்டு வந்தவர்களுக்கு தடைகள் அகலும் , வாழ்க்கைத் துணையால் அந்தஸ்து உயரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் உதவிகரமாக இருப்பர். வாகன வசதி உண்டாகும். கல்வி கற்போருக்கு சிறப்பு உண்டாகும். கடல் கடந்து பயணம் செல்ல நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உருவாகும். பொதுவில் தொட்டதெல்லாம் பொன்னாகும் என்றே சொல்ல வேண்டும்.

பலன்தரும் பரிகாரம் 

ஒரு முறை திருநள்ளாறு சென்று சனி பகவானை வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular