Friday, December 1, 2023
Homeஇன்றைய ராசி பலன்இன்றைய ராசி பலன்கள்-செவ்வாய் -ஜூலை-12-2022

இன்றைய ராசி பலன்கள்-செவ்வாய் -ஜூலை-12-2022

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -
இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

உற்சாகமான நாள். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் நீங்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக சிறு பயணம் மேற்கொள்ள நேரிடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்சி சாதகமாக முடியும். விற்பனை கூடுதலாக இருக்கும்.

ரிஷபம்

விவாதங்களை தவிர்ப்பது நல்லது .குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

மிதுனம்

புதிய முயற்சி சாதகமாக முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசாங்க அதிகாரிகளின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலருக்கு பிள்ளைகளால் வீண் அலைச்சலும், செலவுகளும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. அதனால் கவலை வேண்டாம்.

கடகம்

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். மனஉறுதியுடன் முடிவெடுத்து செயல்படுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்றாலும், உரிய சிகிச்சையினால் உடனே நிவாரணம் கிடைத்து விடும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பெரும்பாலும் இறுதியில் நல்லதே நடக்கும்.

சிம்மம்

மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும். தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்குத் தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவதுடன் லாபமும் அதிகரிக்கும்.

இன்றைய ராசி பலன்கள்

கன்னி

எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் அடைவீர்கள். நன்மை கிட்டும் நாள்.

துலாம்

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

விருச்சிகம்

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

தனுசு

உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உறவினர்களின் வருகையால் உற்சாகம் அடைவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

மகரம்

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

கும்பம்

பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

மீனம்

கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகள் அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular