Saturday, December 2, 2023
Homeஇன்றைய ராசி பலன்இன்றைய ராசி பலன்கள்-புதன் -ஜூலை-13-2022

இன்றைய ராசி பலன்கள்-புதன் -ஜூலை-13-2022

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -
இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வகையில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்

கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உறவினருடன் பகை வரக்கூடும். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வந்து நீங்கும். விழிப்புடன் இருக்க வேண்டிய நாள்.

மிதுனம்

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு குறையும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.

கடகம்

சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

சிம்மம்

கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியை அனுசரித்து போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கன்னி

எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புகழ்பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.

துலாம்

எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நண்பர்கள் உதவுவார்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்

பணபுழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சிலமுக்கிய முடிவுகள் எடுப்பார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.

தனுசு

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

மகரம்

பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். யோகா தியானத்தில் மனம் லயிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். உயர்வு பெறும் நாள்.

கும்பம்

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்று கொள்வார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மீனம்

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புது நட்பு மலரும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் இன்று முடியும் வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular