Saturday, June 15, 2024
Homeஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023:ரிஷபம்|New Year Rasi palan 2023

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023:ரிஷபம்|New Year Rasi palan 2023

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023:ரிஷபம்

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து உங்கள் மனதில் நிம்மதி நிலவ தொடங்கும். அதேசமயம் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு தலைக்கணத்தை தவிர்த்தால் உயர்வுகள் உறுதியாக வரும்.

அலுவலகத்தில் இருந்த சிரமங்கள் விலகி சீரான நன்மைகள் ஏற்பட தொடங்கும். அதேசமயம் எதிலும் நிதானமும் நேரடி கவனமும் அவசியம். தடைப்பட்ட ஊதிய உயர்வு, இடமாற்றம், பதவி உயர்வுகள் படிப்படியாக கைகூடும். உங்கள் பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்காமல் நேரடியாக நீங்களே கவனிக்கிறது நல்லது. உடனிருக்கும் யாரையும் உதாசீனப்படுத்த வேண்டாம்.

இதுவரை வேலை இல்லா வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.திருமண வாய்ப்புகள் கைகூடி வர தொடங்கும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம் வேண்டாம். வாரிசுகள் பெறக்கூடிய பெருமைகள் உங்களுக்கும் சேரும். பூர்வீக சொத்து சம்பந்தமாக வழக்குகள் சாதகமாக தீரும்.

தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். நேரடி கவனமும் நேர்மையும் இருந்தால் லாபத்தின் அளவு அதிகரிக்கும். அயல்நாட்டு வர்த்தகத்தில் இருந்த சிக்கல்கள் விலகி வளர்ச்சி சீராக இருக்கும். பூமி சார்ந்த வர்த்தகத்தில் நிதானம் முக்கியம் பெரும் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023
ஆங்கில புத்தாண்டு கிரக நிலைகள்

அரசு, அரசியல் துறையை சார்ந்தவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். இதுவரைக்கும் உரிய அங்கீகாரமே கிடைக்காதவர்களுக்கு கூட பதவி, பாராட்டுகள் வந்து சேரும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் படிப்படியாக வரத் தொடங்கும் கேளிக்கையும் வீணான சபலமும் உங்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விட வாய்ப்பு உள்ளது ஆகையால் கவனமுடன் இருக்கவும்.

கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு நிச்சயம் சிறப்பான ஆண்டாக இருக்கும். இரவு நேரங்களில் ஊர் சுற்றுவதை தவிர்க்கவும். கூடாத நட்பு மற்றும் தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதைத் முற்றிலுமாக தவிர்க்கவும்.

அலர்ஜி, ரத்த உபாதை, கொழுப்புசத்து அதிகரிப்பு, அஜீரண உபாதைகளை உடனே கவனியுங்கள். பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சனை தெரிந்தால் அலட்சியம் இல்லாமல் சிகிச்சை எடுத்துக் கொள்ளவும்.

பரிகாரம்

அருகிலிருக்கும் சிவாலயங்களுக்கு திங்கள் கிழமைகளில் சென்று வில்வம் இலை கொடுத்து வழிபடுங்கள். முடிந்தால் ஒருமுறை ராமேஸ்வரம் சென்று ராமநாத சுவாமியை வழிபட்டு வாருங்கள் வாழ்வில் நல்லவைகள் நடக்கும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்97குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்35பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20அற்புத ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20தசா புத்தி பலன்கள்19ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சுபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular