Wednesday, June 19, 2024
Homeஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023:மிதுனம் |New Year Rasi palan 2023

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023:மிதுனம் |New Year Rasi palan 2023

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023:மிதுனம்

மதுரை மீனாட்சி அம்மனின் அருள் பெற்ற மிதுன ராசி அன்பர்களே!!!

வரும் புத்தாண்டு உங்களுக்கு சிறப்பான பலன்களை தருவதற்கு நான் இறைவனை மனமார வேண்டுகிறேன்.

புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் உங்கள் ராசிக்கு 5-ல் கேது பகவானும், 7-ல் சூரியனும் புதனும், 8-ல் சுக்கிரனும் சனியும், பத்தில் குருவும், 11-ல் ராகுவும்- சந்திரனும், 12-ல் செவ்வாயும் அமர்ந்துள்ளனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து சங்கடங்கள் நீங்கி சாதகமான விஷயங்கள் நடக்கத் தொடங்கும். பணியிடத்தில் உங்களது திறமையை மேலதிகாரிகளால் உணரப்படும். உடனிருப்பவர்கள் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் யாருடைய தவறையும் பெரிதுபடுத்திப் பேசுவதும் அனுபவமிக்கவற்றை அலட்சியப் படுத்துவதும் கூடவே கூடாது.

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023
ஆங்கில புத்தாண்டு கிரக நிலைகள்

கோப்புகளில் கையெழுத்து இடும் சமயங்களிலும் மற்றும் பணத்தை கையாளும் சமயத்திலும் நிதானத்தை கடைபிடியுங்கள். இடமாற்றம், பதவி உயர்வுகள் தாமதமானாலும் தக்க சமயத்தில் வந்து சேரும்.

குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும், வாழ்க்கைத்துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உங்களது குழந்தைகளுடன் இருக்கும் வீண் சச்சரவை தவிருங்கள். தடைபட்ட சுபகாரியங்கள் உடனடியாக நடக்கும்.

அரசு, அரசியல் துறையினருக்கு சீரான வளர்ச்சி இருக்கும். சின்ன சின்ன பொறுப்புகளில் இருந்தாலும் உங்கள் திறமைகள் வெளிப்பட்டு மேலிடத்து பாராட்டு கிடைக்கும். பொது இடங்களில் வாக்குறுதி ஏதும் தரும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுங்கள். சட்டத்திற்குப் புறம்பானவர்களை நட்பு, கனவிலும் எட்டிப்பார்க்காமல் கவனமாக இருங்கள்.

கலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் படிப்படியாக வரத்தொடங்கும்.யாருடைய வார்த்தையையும் நம்பி கையில் இருக்கும் வாய்ப்பை கோட்டை விட்டுவிட்டு புதியதை தேடி அலைய வேண்டாம்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்

10-ல் குரு இருப்பதால் உங்களது பதவி சார்ந்த விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது. வேலை சார்ந்த விஷயங்களில் யாரையும் நம்பாமல் நீங்களே அதை மேற்பார்வை செய்து முடித்துக் கொள்வது நல்லது.

12-ல் செவ்வாய் வக்ரம் பெற்று இருப்பதால் சகோதர சகோதரிகளுடன் கருத்து வேறுபாடு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது ஆகையால் அவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

8-ல் சனியும் சுக்கிரனும் இணைந்து இருப்பதால் பெண்கள் சார்ந்த விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது. குறிப்பாக பெண்கள் இடத்தில் கடன் வாங்குவது கடன் கொடுப்பது கூடாது.

7-ல் சூரியனும் புதனும் இணைந்து இருப்பதால் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்து செல்ல வேண்டும். வீண் விவாதங்களையும் சண்டை, சச்சரவுகளையும் தவிர்த்தால் இந்த ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமையும்.

5-ல் இருக்கும் கேது பகவான் குழந்தைகளின் கல்வியில் சிறு தடைகளை ஏற்படுத்தலாம். ஆகையால் அவர்களுடைய கல்வியில் நீங்கள் மிக கவனம் செலுத்த வேண்டும்.

வெளிநாட்டு வேலைகளுக்கு முயற்சிப்பவர்கள் நிச்சயம் இந்த ஆண்டு வெளிநாடு வேலை அமையும் மேலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து அந்த நிறுவனங்களின் கோப்புகளை ஆராய்ந்து கையெழுத்திடுவது நல்லது.

பரிகாரம்

இந்த வருடத்தில் முடிந்தால் மதுரை மீனாட்சி அம்மனை சென்று தரிசித்து வருவது உங்கள் வாழ்வில் எதிர்பாராத திருப்பங்களையும் சிறப்பான மாற்றங்களையும் ஏற்படுத்தும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்98குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்35பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25அற்புத ஆலயங்கள்21சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19தசா புத்தி பலன்கள்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சுபகிருது வருட பலன்கள்13குரோதி வருட பலன்கள் 202413ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular