Friday, July 19, 2024
Homeஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023:மகரம்|New Year Rasi palan 2023

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023:மகரம்|New Year Rasi palan 2023

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023:மகரம்

சனி பகவான் அருள் பெற்ற மகர ராசி! அன்பர்களே!பிறக்கும் புத்தாண்டு ஜென்மச் சனி விலகிய பிறகு உங்களுக்கு சிறப்பான பலன்களை வழங்கும். அது மட்டுமல்லாமல் அதன்பிறகு இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி மற்றும் ராகு-கேது பெயர்ச்சி நிகழவிருக்கின்றது. அதன் விளைவாக படிப்படியாக நல்ல முன்னேற்றங்கள் வரலாம். வருடத் தொடக்கத்தில் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் முதல் மூன்று மாதங்களுக்கு முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது. விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். விழிப்புணர்ச்சி யோடு செயல்பட்டாலும் இடையிடையே தடைகளும், தாமதங்களும் வந்து மனக்குழப்பத்தை ஏற்படுத்தும். சுயஜாதக அடிப்படையில் திசாபுத்திக்கேற்ற தெய்வங்களை வழிபட்டால் திருப்தியான வாழ்க்கை அமையும்.

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023
ஆங்கில புத்தாண்டு கிரக நிலைகள்

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே வீற்றிருக்கிறார். அவரோடு சுக்ரனும் இணைந்திருக்கிறார். சகாய ஸ்தானத்தில் குருவும், விரய ஸ்தானத்தில் சூரியனோடு புதனும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். 4-ல் ராகுவும், 10-ல் கேதுவும் இருக்கிறார்கள்.சுகாதிபதி செவ்வாய் வக்ரம் பெற்று பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் புத்தாண்டு தொடங்குகிறது.

புத்தாண்டு தொடங்கும் பொழுது குரு பார்வை 7,9, 11 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே சுபவிரயங்கள் அதிகரிக்கும். தன்னம்பிக்கையை தளரவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தனவரவில் தடைகள் ஏற் பட்டாலும் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். இனத்தார் பகையும், எதிரிகளின் தொல்லையும் ஓரளவுஇருக்கத்தான் செய்யும். பதவி, உத்தியோகம் போன்றவற்றில் பிரச் சினைகள் ஏற்படாது. இடமாற்றம், உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம் போன்றவை நிகழக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு ஒரு சிலருக்கு நீண்ட தூரத்திற்கான இடமாறுதல் வந்து சேரும்.

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023

கவனமாக இருக்க வேண்டிய இருக்க வேண்டிய காலகட்டம்

இப்புத்தாண்டில் 4-முறை செவ்வாய் சனியின் பார்வை ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். எனவே இக்காலத்தில் சொந்தங்களாலும், சொத்துக்களாலும் பிரச்சினை அதிகரிக்கும். சிந்தித்த காரியங்கள் வெற்றிபெறுவது கடினம்தான். கடுமையாக உழைத்தாலும் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. பற்றாக்குறை அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.

பலன் தரும் பரிகாரம்

சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனிபகவானை வழிபட்டு வருவது நல்லது. யோகபலம் பெற்ற நாளில் திருநள்ளாறு மற்றும் திருக்கொள்ளிக் காட்டில் வீற்றி து அருள்வழங்கும் சனிபகவானை முறையாக பட்டு வந்தால் முன்னேற்றம் அதிகரிக்கும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்534அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்35நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular