Wednesday, April 24, 2024
Homeஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023:துலாம்|New Year Rasi palan 2023

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023:துலாம்|New Year Rasi palan 2023

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023:துலாம்

சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த துலாம் ராசி அன்பர்களே! இதுவரை அர்த்தாஷ்டம சனியில் பிடியில் சிக்கியிருந்த உங்களுக்கு இப்பொழுது நல்ல பலன்கள் கிடைக்கப் போகிறது. கடந்த இரண்டரை வருட காலமாக உடலாலும் உள்ளத்தாலும் வேதனைப்பட்டு வந்த உங்களுக்கு இனி வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்கும் வாய்ப்பு வரப்போகிறது. சனிப்பெயர்ச்சி மட்டுமல்லாமல் குரு பெயர்ச்சியும், ராகு-கேது பெயர்ச்சியும் நல்ல பலன்களை அள்ளி வழங்கப் போகிறது. எனவே எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எல்லாவற்றிற்கும் மேலாக ஆரோக்கிய தொல்லைகள் அகன்று அன்றாட வாழ்க்கை நன்றாக அமையும்.

புத்தாண்டு கிரக நிலைகள்

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023
ஆங்கில புத்தாண்டு கிரக நிலைகள்

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியில் கேதுவும்,சப்தமஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். சகாய ஸ்தானத்தில் லாபாதிபதி சூரியனும் விரயாதிபதி புதனும் இருக்கிறார்கள். இதனால் புத ஆதித்த யோகம் ஏற்படுகிறது. 4-ல் உள்ள சனியோடு ராசிநாதன் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். 6-ம் இடத்தில் குரு பலம் பெற்று விளங்குகிறார். அஷ்டமத்தில் செவ்வாய் வக்கிரம் பெற்றிருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் புத்தாண்டு பிறக்கிறது.

ஆண்டு தொடக்கத்தில் குருவின் பார்வை 2,10,12 ஆகிய இடங்களில் பதிவதால் குடும்பஸ்தானம் பலம் பெறுகிறது. எனவே பணவரவு, குடும்ப முன்னேற்றம், தொழில் வளர்ச்சி, உத்தியோக முயற்சியில் வெற்றி போன்றவை ஏற்படும். ஒரு சிலருக்கு வீடு வாங்குவது அல்லது வீடு கட்டும் யோகம் ஏற்படலாம். சொத்து பிரச்சனைகள் சமூகமாக முடியும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மருத்துவ செலவு மனக்கவலையை தரலாம். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வுடன் அமையும்.

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023

கவனமாக இருக்கவேண்டிய கால கட்டம்

இந்தப் புத்தாண்டில் நான்கு முறை செவ்வாய் சனி பார்வை ஏற்படுகிறது இக்காலத்தில் மிகுந்த கவனம் தேவை பணப்பற்றாக்குறை அதிகரிக்கும். எடுத்த முயற்சிகளில் எண்ணற்ற தடை உருவாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். மனக்குழப்பம் அதிகரிக்கும். இக்காலத்தில் வழிபாடுகள் மூலம் தடைகளை அகற்றிக் கொள்ள இயலும்.

செய்ய வேண்டிய பரிகாரம்

வெள்ளிக்கிழமை தோறும் விரதமிருந்து லட்சுமியை வழிபட்டு வாருங்கள். யோக பலம் பெற்ற நாளில் பட்டமங்கலம் சென்று திசை மாறிய தட்சணாமூர்த்தியை வழிபட்டு வந்தால் வளர்ச்சி அதிகரிக்கும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்159ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18அற்புத ஆலயங்கள்18சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213குரோதி வருட பலன்கள் 202413சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3வாஸ்து மர்மங்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2Navagraha temples2மார்கழி மாத ராசி பலன்கள்-20232மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular