Sunday, October 1, 2023
Homeஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023:கடகம்|New Year Rasi palan 2023

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023:கடகம்|New Year Rasi palan 2023

ASTRO SIVA

google news astrosiva

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023:கடகம்

சந்திரனின் அருள் பெற்ற கடக ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் 2023 ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. கடின உழைப்பால் சாதிக்கும் நீங்கள் இந்த புத்தாண்டில் தடைபட்ட வேலைகளை சமயோஜிதமாக பேச்சால் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த பணம் கைக்கு வரும்.

சுக்கிரன் பார்வையில் ராசி

ராசியை சுக்கிரன் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால் குடும்பத்தில் அமைதிக்கு குறையிருக்காது. சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் கைகூடும். வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும்.

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023
ஆங்கில புத்தாண்டு கிரக நிலைகள்

 6-ல் சூரியன்

சூரியன் 6-ல் வலுவடைந்து இருப்பதால் நிலுவையில் இருந்த அரசு காரியங்கள் உடனே முடியும். ராசிநாதன் புதன் 6-ம் வீட்டில் மறைந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால் உறவினர்கள் நண்பர்களுக்காக நீங்கள் அதிகம் உழைப்பீர்கள்.

வருட ஆரம்பம் முதல் 22.4.2003 வரை ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் குரு நிற்பதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். புது சொத்துக்கு மீதி பணத்தை கொடுத்து பத்திரப் பதிவு செய்வீர்கள். தங்க ஆபரணம் வாங்குவீர்கள்.

கவனமாக இருக்க வேண்டிய விடயங்கள்

4ல்-கேது,10ல்-ராகு

08.10.2023 வரையில் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் கேது பகவான் 10-ஆம் வீட்டில் ராகு நிற்பதால் வாகன விபத்துக்கள், காரிய தாமதம், வீண் அலைச்சல், டென்ஷன் வந்துப் போகும். தாயாருக்கு கை கால் வலி சோர்வு வந்து நீங்கும். வீடு மனை வாங்குவது விற்பதில் வில்லங்கம் வந்து விலகும்.

10ல்-குரு

23.04.2023 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 10-ஆம் வீட்டில் குருபகவான் தொடர்வதால் எதிலும் முன்யோசனையுடன் செயல்படுங்கள். வீண் வாக்குவாதம், ஆடம்பரம் ஆகியவற்றை தவிர்க்கவும் முக்கிய வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது.

புத்தாண்டின் தொடக்கத்தில் 7-ல் சனி பகவான் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் குழப்பம் விளைவிக்க சிலர் முயற்சி செய்வார்கள் கவனம் தேவை.

மொத்தத்தில் இந்த புத்தாண்டில் சவால்கள் அதிகமாக இருந்தாலும் உங்கள் சாதனைகள் தொடரும்.

 பரிகாரம்

சனிக் கிழமைகளில் சனி ஓரையில் அருகிலிருக்கும் சிவாலயங்களுக்கு சென்று சனிபகவானுக்கு எள் முடிச்சு தீபம் ஏற்றி வழிபடுங்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள். இந்த வருடம் இனிமையான வருடமாக அமையும். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular