Thursday, May 23, 2024
Homeசனி பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள் 2023 to 2026 மகரம்

சனி பெயர்ச்சி பலன்கள் 2023 to 2026 மகரம்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

சனி பெயர்ச்சி பலன்கள் -மகரம்

மகர ராசிக்கு ஜென்மச்சனி உள்ளது, இப்போதைய இடப்பெயர்ச்சியில் அது பாதச்சனியாக மாறும், அவர் மகர ராசியிலிருந்து குடும்ப ஸ்தானத்துக்கு மாறுகிறார். அங்கு அவிட்டம், சதயம், பூரட்டாதி எனும் நட்சத்திரங்களின் வழியே பலன் கொடுப்பர். 2-ஆமிடத்தில் சனிபகவான் அமர்ந்து. 4-ஆமிடம், 8, 11-ஆமிடத்தைப் பார்வையிடுவார்.

சனி பெயர்ச்சி நாள் -Sani peyarchi Date

இந்த சுபகிருது வருடம், உத்திராயணம் ஹேமந்த ருது. தை மாதம் 3-ஆம் தேதி (17.1.2023) கிருஷ்ண பட்சம் (தேய்பிறை) தசமி, செவ்வாய்க்கிழமை விசாக நட்சத்திரம், 4-ஆம் பாதம், விருச்சிக ராசி. கண்ட நாம் யோகம், பவ கரணம் கூடிய யோக சுப தினத்தில் கடக லக்னத்தில் விருச்சிக ராசியில், சிம்ம நவாம்சத்தில், கடக நவாம்ச ராசியில் சனி பகவான் மகர ராசியில்இருந்து கும்பராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

சனி இருப்பிட பலன்

மகர ராசியின் 2-ஆமிடம் என்பது வாக்கு, தன, குடும்ப ஸ்தானம். சனி எப்போதும் இருந்த இடத்தை விருத்திசெய்வார். அதன்படி, மகர ராசியில் திருமணம். செய்ய காத்துக் கொண்டிருப்போருக்கு திருமணம் நிச்சயமாகும். இதுவரையில் பேசமுடியாத, இயலாத குழந்தைகள் இப்போது பேசுவர். இதுவரையில் கையில் காசு பணப்புழக்கம் மிக திண்டாட்டமாக உணர்ந்த மகர ராசியினர் இப்போது கையில் தாராள பணப்புழக்கத்தைப் பெறுவர். உங்கள் குடும்பத்தில் சிலரின் சேர்க்கை மகிழ்ச்சி தரும். சிலரின் விலகல் குதூகலம் தரும். உங்கள் சொற்கள் காத்திரம் பெறும், உங்களின் பேச்சுக்குகுடும்பம் கட்டுப்படும். முகம் பொலிவு பெறும், பணம் எவ்வளவு புழங்கினாலும் ஒரு கஞ்சத்தன ம் வந்துவிடும். இதனை 2-ஆமிட சனி தருவார்.

சனி பெயர்ச்சி பலன்கள்

அனேக வருமானம் பேசுவதின்மூலம் கிடைக்கும். இதனால் வக்கீல்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஜோதிடர்கள், பிரசங்கம் செய்பவர்கள், ஆடிட்டர்கள், வியாபாரிகள், விற்பனைப் பிரதிநிதிகள், நிதி ஆ லோசகர் என இன்னபிற வகையறாக்கள் வேலையில் உயர்வு பெறுவீர்கள். அசையும் சொத்துகளை வாங்குவீர்கள். சாமர்த்தியமாகப் பேசுவீர்கள். குடும்பத்தில் தன்னைச் சார்ந்தோரை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்வீர்கள். மேலும் சற்று சௌகர்யமாக இருப்பதற்குரிய வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீங்கள் நீண்டகாலமாக எண்ணிய எண்ணங்களை நல்லவிதமாக செயல்படுத்த முனைவீர்கள்.

சனி பெயர்ச்சி பலன்கள்

சனி 3ம் பார்வை பலன்

மகர ராசிக்கு 2-ஆமிடத்தில் அமர்ந்த சனி இவர்களின் நான்காமிடத்தைப் பார்க்கிறார். 4-ஆமிடம் என்பது தாயார் ஸ்தானம். எனவே முதலில் தாயாரின் உடல்நலத்தில் கவனம் எடுக்க வேண்டியிருக்கும், உங்கள் தாயார் அல்லது மாமியார் எங்காவது விழுந்து அடிபடக்கூடும். வீடு பழுது பார்க்கும் செலவுண்டு.இந்த சனிப்பெயர்ச்சி உங்கள் வீட்டை உங்களால் முழுமையாக அனுபவிக்க விடாது.

இந்த காரணத்திற்காகவே மகர ராசியினர் வீட்டின் ஒரு பகுதியை உங்கள் தொழில் உபயோகத்திற்கு பயன்படுத்த ஆரம்பியுங்கள். இதுவே ஒரு பரிகாரம்போல ஆகி விடும்.வாழ்க்கைத் துணையின் தொழிலில் கவனம் தேவை. பசுக்கள் வளர்த்தால் கவனமாக இருக்கவேண்டும். அரசியல்வாதிகளின் வீடுகள், அரசு அதிகாரிகளால் சோதனையிடப்படும். சிலரின் வீடுகள் சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டப்பட்டுள்ளது என அரசு சட்டம் கூறி இடிக்கப்படும் அபாயமும் உண்டு.

சனி 7ம் பார்வை பலன்

சனி தனது ஏழாம் பார்வையால் மகர ராசியின் 8-ஆமிடத்தை எட்டிப் பார்க்கிறார். 8மிடம் என்பது துன்பம் துயர, அழுகை, பீடை ஸ்தானம். சனி பார்க்குமிடத்தை பாழாக்குவார். எனில் இந்த 8-ஆமிட அவமான ஸ்தானத்தைப் பார்த்து அதனையும் பாழாக்குவார். எனவே இந்த சனிப்பெயர்ச்சி மகரத்தாருக்கு மகத்தான நன்மை தரும். இவர்களின் நெடுநாளைய அவமானம், துயரம் இவர்களைவிட்டு நீங்கும். நிறைய பேருக்கு வேண்டாத செயல்களின் தாக்கம் மறையும். சொந்த ஊரில் நீங்கள் பட்ட அவமானம், உங்கள்மீது விழுந்த பழி நீங்கும்.

சனி 8-ஆமிடத்தைப் பார்த்து துன்பங்களை மறையச் செய்வார். 8-ஆமிடம் என்பது ஆயுள் ஸ்தானம், மாங்கல்ய ஸ்தானம், சனி 8-ஆமிடத் தைப் பார்த்தால் ஆயுள்விருத்தி என்பர். எனவே மகர ராசியினர் ஆயுள் சம்பந்த விபத்துகள் தவிர்க்கப்படும். அதுபோல் மாங்கல்யமும் பலப்படும்.

சனி 10ம் பார்வை பலன்

சனிபகவான் மகர ராசியின் 2-ஆமிடத்தில் அமர்ந்து தனது பத்தாம் பார்வை மூலம் 11-ஆமிடத்தைப் பார்க்கிறார். 11-ஆமிடம் என்பது மூத்த சகோதரத்தைக் குறிப்பது அவர் தற்போது இருக்குமிடத்தில் இருந்து வேறிடத்திற்கு இடமாற்றம் பெறலாம். நீங்கள் தினைத்த விஷயங்கள் திறைவேற தாமதமாகும்.தொழிலில் விறுவிறு முன்னேற்றம் எதிர் பார்க்க வேண்டாம்.

இளைய சகோதரனின் அனுசரணை குறையும், மறுமண பேச்சுகள் தாமதமாகும். தாய்மாமன் கொஞ்சம் சுணக்கம் காட்டுவார். உங்கள் வேலை, மனை விற்பனை சம்பந்த வழக்குகள் இழுத்தடிக்கும் சில செயல்கள் நிறை வேறினாலும் அதன் தாமதம் உங்களுக்கு முழு நிறைவைக் கொடுக்காது. மருமகன் அல்லது மருமகள் வருவதற்குள் நிறைய சங்கடங்கள் ஏற்படும்.வாரிசு திருமணங்களை ஓரளவுக்கு சரியாக இருந்தாலே உடனே நடத்தி விடுங்கள் இல்லை யெனில் தள்ளிக்கொண்டே போய்விடும் சிலரின் மருமகன்கள் பாடாய்ப்படுத்துவார்கள்.

சனி பெயர்ச்சி பலன்கள்

பலன் தரும் பரிகாரம்

உங்களுக்கு ஏழரைச்சனியின் பாதச்சனி ஆதலால் சனீஸ்வரருக்கு சனிக்கிழமைகளில் எள் முடிச்சிட்ட நல்லெண்ணெய் தீபமேற்று வது நன்று ஆஞ்சனேயரை செந்தூரம் கொண்டு வணங்கவும்,

சனிக்கிழமை திருச்சி உறையூரிலுள்ள வெக்காளி அம்மன் கோவிலில் ஸ்ரீபொங்கு சனீஸ்வரரை வழிபட வேண்டும்,

சுந்தரகாண்டம் 38-ஆவது சர்க்கம், காகாசுர விருத்தாந்தம் பாராயணம் நல்லது. நிலக் கடலை விவசாயிக்கு உதவுவதும், எருமை வளர்ப்போருக்கு தேவையறிந்து உதவுவதும் நன்று.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்160ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்33பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19தசா புத்தி பலன்கள்19அற்புத ஆலயங்கள்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சுபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular