Friday, July 26, 2024
Homeபரிகாரங்கள்சூரிய திசை மற்றும் சூரிய புத்திக்கான பரிகாரங்கள்

சூரிய திசை மற்றும் சூரிய புத்திக்கான பரிகாரங்கள்

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

சூரிய திசை மற்றும் சூரிய புத்திக்கான பரிகாரங்கள்

சூரியனுக்கான திதி சப்தமி திதி ஆகும். இந்த சப்தமி திதி ஞாயிற்றுக்கிழமை சேர்வது மிகவும் சிறப்பு. மேலும் வளர்பிறையில் ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதி சேர்வது அளவற்ற நன்மைகளை கொடுக்கும். மேலும் பிரதி தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதாலும், ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய சதகம், ஆதித்ய ஹ்ருதயம் படிப்பதாலும் சூரிய தோஷங்கள் விலகி நன்மைகள் ஏற்படும்.

சூரிய திசை

 விரத முறை

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை பகலில் 11:00 மணிக்கு மேல் 12:00 மணிக்குள் சிகப்பு மலர்களால் சூரிய பூஜை அல்லது சிவபூஜை செய்து கோதுமை பண்டங்களால் ஆன பலகாரங்களை நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்கி தானும் எடுத்துக் கொள்ள சூரிய தோஷங்கள் விலகும்.

 சூரியனுக்கான சிறப்பு விரத நாட்கள்

  •  வளர்பிறையிலும் தேய்பிறையிலும் சப்தமி திதி உள்ள நாட்கள்
  • சப்தமி திதியும் ஞாயிற்றுக்கிழமையும் கூடும் பானு சப்தமி நாட்கள்
  • சப்தமி திதியும் ஞாயிற்றுக்கிழமையும் வளர்பிறையில் வரும் கல்யாண அல்லது விஜய சப்தமி நாட்கள்.
  • சைத்ர சுத்த சப்தமி அன்று வரும் கமல சப்தமி ,சந்தான சப்தமி பாஸ்கர தமனம் உள்ள நாள்.
  • யுகாதி புண்ணிய தினங்கள், யுகாந்தப் புண்ணிய தினங்கள், மன்வாதி புண்ணிய தினங்கள், கல்பாதி புண்ணிய தினங்கள், வைதிருதி சிராத்த தினங்கள், வியதீபாத சிராத்த தினங்கள், திஸ்ரோஸ்டகா, அஷ்டகா, அன்வஷ்டகா ஆகியவற்றில் தில ஹோமங்கள், பித்ரு பூஜைகள் செய்வது.
  • வைசாக சுக்ல திருதியையில் நிகழும் அக்ஷய திருதியை நாள்.
  • வைசாக சுக்ல சப்தமி அன்று வரும் கங்கோத் பத்தி, கங்கா சப்தமி நாள்.
  • பாத்ரபத சுக்ல சப்தமி அன்று வரும் அமுக்தாபரண சப்தமி மற்றும் அமுக்தாபரண விரத நாள்.
  • மார்க சிர சுத்த சப்தமி அன்று வரும் சூரிய விரதம், பல சப்தமி விரதம்
  •  மார்கசிர கிருஷ்ண சப்தமி அன்று வரும் சர்வ சப்தமி நாள்.
  • மாக சுத்த சப்தமி அன்று வரும் ரத சப்தமி, சூரிய ஜெயந்தி, அசோக சப்தமி, விரத நாட்கள்.
  • ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரும் மாத பிறப்பு நாட்கள்
  • உத்திரம் நட்சத்திரம் உள்ள நாட்கள்
  • விஷு புண்ணிய காலங்கள், விஷ்ணுபதி புண்ணிய காலங்கள், தக்ஷாயன மற்றும் உத்தராயன புண்ணிய காலங்கள், ஷடசீதி புண்ணிய காலங்கள் ஆகிய இந்த நாட்களில் பிற்பகல் 18 நாழிகைக்கு மேல் 24 நாழிகைக்குள் இறந்த முன்னோர்களுக்கான பூஜைகள் செய்து சூரிய பூஜை செய்ய பித்ரு சாபங்கள் விலகும். 
சூரிய திசை

சூரிய பகவானுக்கான பரிகார ஸ்தலம்

வளர்பிறையிலும் தேய்பிறையிலும் சப்தமி திதி உள்ள நாட்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் உங்கள் நட்சத்திரத்திற்கு தார பலன் உள்ள நாளில் கும்பகோணம் அருகில் உள்ள சூரியனார் கோயில் சென்று அங்கு முறைப்படி தீப வழிபாடு செய்து வர சூரிய தோஷங்கள் விலகும். 

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular