Rasi Palan Today-23.09.2021

மேஷம்-Mesham
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசு வார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
ரிஷபம்-Rishabam
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார். தொட்டது துலங்கும் நாள்.
மிதுனம்-Mithunam
உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
கடகம்-Kadagam
அரசு காரியங்கள் சாதகமாக முடியும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
சிம்மம்-Simmam
மனதில் இனம் தெரியாத குழப்பத்திற்கு இடம் தராதீர்கள். புதிய முயற்சிகளை நன்கு திட்டமிட்டு நிதானமாக யோசித்துச் செய்யவும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் செலவுகள் ஏற்படவும் இடம் உண்டு. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். வியாபாரத்தில் பணியாளர்களுடன் அனுசரித்துச் செல்லவும். மொத்தத்தில் இது ஒரு சுமாரான நாள் தான். சிலர் எதிர் நீச்சல் போட்டு முன்னேறுவீர்கள்.
கன்னி -Kanni
மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். தெளிவாகப் பேசுங்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
துலாம்-Thulam
சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.
விருச்சிகம்-Viruchigam
குடும்பத்தில் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். எதிர் பார்த்த பணம் கைக்கு வரும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தி யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள் .
தனுசு-Thanusu
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வகையில் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும். மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.
மகரம்-Magaram
சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.வியாபாரத்தில் பழைய வேலை யாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
கும்பம்-Kumabm
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. பழைய சிக்கலில் ஒன்று தீரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.
மீனம்-Meenam
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம்… சிலருக்கு உத்தியோக மாற்றம் கூட உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட இடம் உண்டு. எனினும் சமாளித்து விடுவீர்கள். கணவன் மனைவிக் கிடையே திடீர் மனவருத்தம் ஏற்பட்டு விலகலாம். முடிந்த வரையில் பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளின் மனதறிந்து நடப்பது நல்லது. இது ஒரு சுமாரான நாள்.
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …