- Advertisement -
ஆங்கிலபுத்தாண்டுபலன்கள்-2022-துலாம்
(விசாகம் 1,2,3,சுவாதி,சித்திரை3,4)
அன்புள்ள துலா ராசி நேயர்களே , பிறரை எளிதில் புரிந்துகொள்ளும் ஆற்றலும் , நேர்மையையே குறிக்கோளாகக் கொண்டவராகவும் விளங்கும் உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
- 2022 – ஆம் வருடத்தில் 13-4-2022 வரை ஆண்டுக் கோளான குரு பஞ்சம ஸ்தானமான 5 – ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் , முன்னேற்றங்கள் உண்டாவதுடன் , எதையும் எதிர்கொள்ளக்கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும்.
- பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
- குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும்.
- திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவந்து சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும்.
- பூர்வீகச் சொத்துகளால் அனுகூலம்கிட்டும்.
- தொழில் , வியாபாரத்தில் ஆண்டின் தொடக்கத்தில் வளமான பலன்கள் கிடைக்கும்.
- உங்கள் முயற்சிகளுக்கு நற்பலன் கிடைக்கும் நிலை உண்டாகும்.
- 2022 – ஆம் ஆண்டில் உங்கள் ராசிக்கு 4 , 5 – க்கு அதிபதியான சனி பகவான் 4 – ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு அர்தாஷ்டமச்சனி நடைபெறுவதால் தேவையில்லாத அலைச்சல் ஏற்படும்.
- வேலைப்பளு காரணமாக உடல் அசதி ஏற்படும்.
- உங்களது சுகவாழ்வு , சொகுசு வாழ்வு சற்று பாதிக்கும்.
- 13-4-2022 முதல் குரு உங்கள் ராசிக்கு ருண , ரோக ஸ்தானமான 6 – ல் சஞ்சரிப்பதால் , பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது , ஆடம்பாச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது.
- தொழில் , வியாபாரத்தில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள்.
- வேலையாட்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்காது.
- எதிலும் நீங்கள் முன்நின்று செயல்பட்டால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும்.
- முடிந்தவரை கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல்பயன்படுத்திக் கொள்வதன்மூலம் பொருட்தேக்கம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
- உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும்.
- உடன்பணி புரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
- உங்கள் பணியில் மட்டும் கவனத்துடன் செயல்படுவது.
- முடிந்தவரை வேலைப்பளுவைக் குறைத்துக் கொள்ளவது நல்லது.
- இவ்வருடத்தில் உங்கள் ராசிக்கு 2 , 8 – ல் சஞ்சரிக்கும் கேது . ராகு 12-4-2022 முதல் கேது ஜென்ம ராசியிலும் ராகு 7 – லும் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் , குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படும்.
- ஒன்றுமில்லாத விஷயத்திற்குக்கூட கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் கணவன்- மனைவியிடையே பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது , விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
- குடும்ப விவகாரங்களை பிறரிடம் பகிர்ந்துக்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.
- உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது.
- உங்கள் ராசிக்கு 4 – ல் சஞ்சரிக்கும் சனி திருக்கணிதப்படி அதிசாரமாக 29-4-2022 முதல் 12-7-2022 வரை 5 – ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு உள்ள நெருக்கடிகள் இக்காலத்தில் சற்று குறைந்து நற்பலன்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு.
- Advertisement -