Monday, March 20, 2023
Homeராசிபலன்புத்தாண்டு பலன்கள்-2022புத்தாண்டு பலன்கள்-2022-மகரம்

புத்தாண்டு பலன்கள்-2022-மகரம்

ASTRO SIVA

google news astrosiva

புத்தாண்டு பலன்கள்-2022-மகரம்(உத்திராடம் 2 ,3,4-ஆம் பாதங்கள் , திருவோணம்,அவிட்டம் 1,2 – ஆம் பாதங்கள்)

அன்புள்ள மகர ராசி நேயர்களே , நண்பர்களாக இருந்தாலும் , விரோதிகளாக இருந்தாலும் சமமாகப் பழகும் குணமும் , எத்தகைய துன்பம் நேர்ந்தாலும் தாங்கிக்கொள்ளும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

2022 ஆம் ஆண்டில் உங்கள் ராசியாதிபதி சனி பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடைபெறுகிறது.எதிலும் நிதானமாக செயல்பட்டால் தேவைகளைப் பூர்த்திசெய்து வாழ்வில் ஏற்றங்களை அடையமுடியும்.

ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுவதால் மனநிம்மதி குறையும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடப்பது , பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது போன்றவற்றால் குடும்பத்தில் ஒற்றுமையை நிலைநாட்ட முடியும்.

உற்றார் உறவினர்களால் சிறுசிறு ஆதாயங்களைப் பெறுவீர்கள்.ஏழரைச்சனி நடைபெற்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் அதிக கெடுதியை ஏற்படுத்தமாட்டார். எதையும் எதிர்கொண்டு அடையவேண்டிய இலக்கை அடைந்துவிடுவீர்கள்.

2022 – ஆம் ஆண்டில் 13-4-2022 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் , ஏப்ரல் வரை பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும்.

புத்தாண்டு பலன்கள்-2022-மகரம்
புத்தாண்டு பலன்கள்-2022-மகரம்

ஆண்டின் தொடக்கத்தில் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் 13-4-2022 முதல் உங்கள் ராசிக்கு 3 – ல் சஞ்சரிக்க இருப்பது சாதகமான அமைப்பென்று கூறமுடியாது. எனவே பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும்.
முடிந்தவரை ஆடம்பர செலவுகளைக் குறைப்பது அதிகப்படியாக கடன்கள் வாங்குவை தனிப்பது உத்தமம். சொந்த மனை வாங்கும் விஷயங் சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல் வாங்கலில் முடிந்தவரை பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது உத்தமம்.

தொழில் வியாபாரத்தில் போட்டிகள் நிலவினாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளித்து போட்ட முதலீட்டை எடுத்துவிடுவீர்கள்.வேலையாட்களை அனுசரித்துச் சென்றால் நேருக்கடிகளை சமாளிக்கலாம். வெளியூர் , வெளிநாட்டுத் தொடர்புகளால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் ஆதாயப் பலன்களை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிறர் விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்த்து உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

கேது உங்கள் ராசிக்கு ஆண்டு தொடக்கத்தில் 11 – ல் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் ,12-04-2022 -ல் ஏற்படவுள்ள ராகு-கேது பெயர்ச்சிமூலம் ராகு ஜென்ம ராசிக்கு 4 – ல் , கேது 1 – ல் சஞ்சரிக்க இருப்பதால் தேவையற்ற அலைச்சலையும் , இருப்பதை அனுபவிக்க இடையூறுகளையும் ஏற்படுத்தலாம் .

முடிந்தவரை வேலைப்பளுவை குறைத்துக்கொள்வது நல்லது. திருங்கணிதப்படி உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் அதிசாரமாக 2-4-2022 முதல் 12-7-2022 வரை தன ஸ்தானமான 2 – ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருக்கும் காலத்தில் நெருக்கடிகள் குறைந்து சில ஆதாயங்களை அடையும் யோகம் உண்டாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular