Thursday, December 7, 2023
Homeஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023:கன்னி|New Year Rasi palan 2023

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023:கன்னி|New Year Rasi palan 2023

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023:கன்னி

புதனின் அருள் பெற்ற கன்னி ராசி அன்பர்களே! வரும் புத்தாண்டு உங்களுக்கு வளர்ச்சியை கொடுக்கும் ஆண்டாகவே அமையப்போகிறது. மாபெரும் கிரகங்களான விளங்கும் சனி, குரு, ராகு, கேது ஆகியவற்றின் பயிற்சி காலங்கள் முன்னோக்கி செல்லும் சூழ்நிலையை உருவாக்கும்.

திடீரென பின்னோக்கி செல்லும் வாய்ப்பு உண்டு. காரணம் சர்ப்ப கிரகங்களின் ஆதிக்கம் இந்த ஆண்டு உங்கள் ராசியில் வருகிறது. எனவே ஏற்றமும் இரக்கமும் கலந்த சூழ்நிலை உருவாகும்.

துணிவும் தன்னம்பிக்கையும் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இடமாற்றம், வீடு மாற்றம், உத்தியோகம் மாற்றம் போன்றவை வந்து மன அமைதியை குறைக்கலாம்.தசாபுத்திக்கு ஏற்றவாறு தெய்வ வழிபாடு திருப்தியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

புத்தாண்டு கிரக நிலைகள்

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023
ஆங்கில புத்தாண்டு கிரக நிலைகள்

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் விரையாதிபதி சூரியனோடு இணைந்து சுகஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே ஆரோக்கியம் சீராக கொஞ்சம் விரயம் செய்ய வேண்டிய சூழல் உருவாகும். வருட தொடக்கத்தில் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். சுக்கிரனோடு இணைந்து பஞ்சமஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கிறார். 9-ம் இடத்தில் வக்கிரம் பெற்ற செவ்வாய் வீற்றிருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் புத்தாண்டு தொடங்குகிறது.

புத்தாண்டு தொடங்கும் போது குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதோடு 2, 11 ஆகிய இடங்களிலும் பதிகிறது. எனவே உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். கடன் சுமை குறைய புதிய வழி பிறக்கும். கவலைகள் ஆகல உடன்பிறப்புகள் வழி காட்டுவர். பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை. பெரிய தொகை ஒன்று கைக்கு கிடைத்து அதன் மூலம் சுப காரியங்களை நடத்துவீர்கள். இடம், பூமி விற்பனையால் லாபம் உண்டு. தன வரவை மேம்படுவதற்கான தகுதியே வளர்த்துக் கொள்வீர்கள். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். மாற்று இனத்தவர்கள் ஒத்துழைப்போடு கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023

கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்

புத்தாண்டில் 4 முறை செவ்வாய் சனி பார்வை ஏற்படுகிறது. இக்காலத்தில் சகோதர ஒற்றுமை குறையலாம். சேமிப்புகள் கரையலாம். இழப்புகளை ஈடு செய்ய எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படும். பொருளாதார பற்றாக்குறையின் காரணமாக கடன் சுமை மற்றும் கைமாற்று வாங்கும் சூழ்நிலை அமையும். உடல் நலத் தொல்லைகளும் ரண சிகிச்சைகளும் ஏற்படும். புதிய வாய்ப்புகள் வந்தாலும் உபயோகப்படுத்தி கொள்ள இயலாது. இடம், பூமியால் பிரச்சனைகள் அதிகரிக்கும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் வரும். மேலும் வீடு மாற்றம், நாடு மாற்றம் ஏற்படலாம்.

செய்யவேண்டிய பரிகாரம்

பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து நந்தி பெருமானை வழிபட்டு வாருங்கள். யோக பலம் பெற்ற நாளில் சிவபெருமானையும் அம்பாளையும் வணங்கி வந்தால் வாழ்க்கை வளமாகும்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular