Friday, September 29, 2023
Homeஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023:கும்பம்|New Year Rasi palan 2023

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023:கும்பம்|New Year Rasi palan 2023

ASTRO SIVA

google news astrosiva

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023:கும்பம்

சனிபகவானின் அருள் பெற்ற கும்ப ராசி அன்பர்களே!வரும் புத்தாண்டில் விரயச் சனியின் ஆதிக்கம் முடிந்து ஜென்மச் சனியின் ஆதிக்கம் தொடங்கப்போகிறது. குருப்பெயர்ச்சி மற்றும் ராகு-கேதுக்களின் பெயர்ச்சியும் நடைபெறப் போகிறது. எனவே சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமையும். எண்ணிய எண்ணங்களை எளிதில் முடிப்பதில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும், எதிர்பார்ப்புகள் கடைசியில் நிறைவேறிவிடும். ஏழரைச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் மனக்குழப்பங்கள் அதிகரிக்கலாம். இதைச் செய்வோமா? அதைச் செய்வோமா? என்ற இரட்டைச் சிந்தனை ஏற்பட்டு மனதை அலைக்கழிக்கும். தன்னம்பிக்கையும், தெய்வ நம்பிக்கையும் இருந்தால் தடைகள் விலகும்.

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023
ஆங்கில புத்தாண்டு கிரக நிலைகள்

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி. விரய ஸ்தானத்தில் இருக்கிறார். எனவே விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கலாம். குடும்பச்சுமை கூடும். கொடுக்கல் -வாங்கல்களில் கவனம் தேவை. 2-ம் இடத்தில் குருவும், 3-ம் இடத்தில் சந்திரனோடு ராகுவும் சஞ்சரிக்கின்றனர். சுக ஸ்தானத்தில் செவ்வாய் வக்ரம் பெற்றிருக்கிறார். 9-ம் இடத்தில் கேதுவும், லாப ஸ்தானத்தில் சூரியன், புதனும், விரய ஸ்தானத்தில் சுக்ரனும் அமர்ந்தபடி இந்த ஆண்டு தொடங்குகிறது.

புத்தாண்டு தொடக்கத்தில் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே கடன்சுமை கொஞ்சம் குறையும். கவலைகள் தீர வழிபிறக்கும். திடீர் இடமாற்றம், வாகன மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தொழிலில் பழைய பங்குதாரர்கள் விலக நேரிடும். நடக்கும் தொழிலில் புதிய பங்குதாரர்களை இணைத்துக் கொள்ள முன்வருவீர்கள். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பணிபுரியும் இடத்தில் சகப் பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023

கவனமுடன் செயல்பட வேண்டிய காலகட்டம்

இந்தப் புத்தாண்டில் 4 முறை செவ்வாய் சனியின் பார்வை ஏற்படுகிறது. உங்கள் ராசிநாதனும், 3, 10-க்கு அதிபதியான செவ்வாயும் பகைக் கிரகம் என்பதால், இருவரும் பார்த்துக் கொள்வது அவ்வளவு நல்லதல்ல. எதிரிகளின் பலம் கூடும். ஆரோக்கியத்திற்காக அதிகம் செலவிடுவீர்கள். எதிர்கால பயம் அதிகரிக்கும்.

பலன் தரும் பரிகாரம்

அஷ்டமி திதியில் பைரவரை வழிபடுங்கள். காரைக்குடி அருகே பெரிச்சிக் கோவிலில் வீற்றிருந்து அருளும் பைரவர் மற்றும் சனி பகவானை யோகபலம் பெற்ற நாளில் வழிபட்டால் எல்லா வளமும், நலமும் கிடைக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular