Friday, December 1, 2023
Homeஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023:மீனம்|New Year Rasi palan 2023

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023:மீனம்|New Year Rasi palan 2023

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023:மீனம்

குரு பகவானின் அருள் பெற்ற மீனராசி! அன்பர்களே இந்த புத்தாண்டில் உங்களுக்கு ஏழரை சனி தொடங்க இருக்கிறது மேலும் இந்த ஆண்டில் குரு பெயர்ச்சி மற்றும் ராகு கேது பயிற்சிகளும் நிகழவிருக்கின்றன. ஜனவரி மாதம் முதல் லாப ஸ்தானத்தில் வீற்றிருக்கும் சனி ஜனவரிக்கு பின் விரைஸ்தானத்திற்கு செல்கிறார் எனவே ஜனவரிக்குப் பின் விரயங்கள் அதிகமாக இருக்கும் மனக்குழப்பங்கள் ஏற்படும் இடமாற்றம் உத்தியோகம் மாற்றங்களை பற்றி சிந்திப்பீர்கள் எதிர்மறை சிந்தனைகள் அலைமோதும் ஏழரை சனி எத்தனையாவது சுற்று வருகிறது என்பதை அறிந்து அதற்குரிய வழிபாடுகளை மேற்கொண்டால் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படாது.

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023
ஆங்கில புத்தாண்டு கிரக நிலைகள்

புத்தாண்டின் தொடக்கத்தில் ராசிநாதன் குரு, உங்கள் ராசியிலேயே இருக்கிறார். தன ஸ்தானத்தில் ராகுவும், அஷ்டமத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றனர். தனாதிபதி செவ்வாய் வக்ரம் பெற்று மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கிறார். தொழில் ஸ்தானத்தில் சூரியனோடு புதன் இருக்கிறார். லாப ஸ்தானத்தில் சனி, சுக்ர சேர்க்கை உள்ளது. சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. இப்படிப்பட்ட கிரக அமைப்போடு இந்தப் புத்தாண்டு தொடங்குகிறது.

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023

புத்தாண்டு தொடக்கத்தில் குரு, உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பது யோகம்தான். உங்கள் ராசிநாதனான அவரது பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிகிறது. பூர்வ புண்ணிய ஸ்தானம் புனிதமடைவதால், வருடத் தொடக்கம் வசந்தமாக இருக்கும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். பொருளாதார நிலை உயரும். புதிய பொறுப்புகள் வந்துசேரும். உறவினர்களும், நண்பர்களும் உதவிகரமாக இருப்பர். உடல்நலத்தில் சிறுசிறு தொல்லைகள் ஏற்பட்டாலும் அவற்றைப் பற்றிக்கவலைப்பட மாட்டீர்கள். கடமையிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து காரியங்களில் வெற்றி பெறும் நேரம் இது.

கவனமுடன் இருக்க வேண்டிய காலகட்டம்

இந்தப் புத்தாண்டில் 4 முறை செவ்வாய்-சனி பார்வை ஏற்படுகிறது.
முரண்பாடான கிரகங்களின் பார்வை அவ்வளவு நல்லதல்ல. மேலும் செவ்வாய் தனாதிபதி என்பதால் இக்காலத்தில் பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்படும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையால் பிரச்சினைகள் வரலாம். குடும்பத்திலும், உடன்பிறப்புகள் வழியிலும் போராட்டங்களும், மனக் குழப்பங்களும் கூடும். எதையும் யோசித்துச் செய்வதோடு, திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளையும் மேற் கொள்வது நல்லது.

பலன் தரும் பரிகாரம்

பிரதோஷ விரதமிருந்து நந்தியை வழிபட்டு வாருங்கள். யோகபலம் பெற்ற நாளில் தஞ்சை பெரியகோவில் நந்தியை வழிபட்டால் சந்தோஷத்தை சந்திப்பீர்கள்.

கோவில் இருப்பிடம்

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular