Monday, March 20, 2023
Homeஅடிப்படை ஜோதிடம்உங்கள் நட்சத்திர பஞ்ச பட்சியை தெரிந்து கொள்ளுங்கள்

உங்கள் நட்சத்திர பஞ்ச பட்சியை தெரிந்து கொள்ளுங்கள்

ASTRO SIVA

google news astrosiva

பஞ்ச பட்சி

அகஸ்திய மகரிஷியே பஞ்ச பட்சி சாஸ்திரம் என்ற புதிய முறையை வகுத்தார். 27 நட்சத்திரங்களையும் 5 பட்சிகளுக்குள் அடக்கினார். இவைகளில் ஒவ்வொரு பட்சியின் கால நடப்பிலும் அந்த பச்சை அளிக்கும் நன்மை தீமைகளைத்தான் நாம் படுபட்சி தொழில் வல்லமை என்று கூறுகின்றோம்.

வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் என்ற 5 பட்சிகளும் ஞாயிறு முதலிய ஏழு நாட்களையும் அ,ஈ, ஊ, ஏ, ஓ என்ற ஐந்து எழுத்துக்களில் அடக்கினார். இந்த ஐந்து உயிர் எழுத்துக்களும் பஞ்சபூதத்தை குறிக்கும். வளர்பிறை பகல் இரவுகளுக்கும், தேய்பிறை பகல் இரவுகளுக்கும் ஐந்து பட்சிகளின் தொழில்களான ஊண், நடை, அரசு, துயில், சாவு நடக்கையை பகல் 5 பொழுதுக்கும், இரவு 5 பொழுதுக்கும் பிரித்தி வகைப்படுத்தியுள்ளனர்.

பஞ்ச பட்சி

அன்பர்கள் தாங்கள் மேற்கொள்ள இருக்கின்றனர் செயலை துதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகளிலும்.

அஸ்வினி, ரோகிணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம், மகம், பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய முழு சுப நட்சத்திரங்களிலும்

ஞாயிறு, திங்கள் ,புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளிலும் அமிர்த-சித்த யோகங்கள் நடைபெறும் சுப வேலைகளில் தொடங்கினால் அச்செயல் யாதொரு இடையூறும் இன்றி எளிதில் சித்தி பெறும்.

ஜென்ம நட்சத்திரம்

 அசுவினி, பரணி, கார்த்திகை,ரோகிணி, மிருகசீரிடம்

 வளர்பிறையில் பிறந்தவருக்கு  பஞ்ச பட்சி-வல்லூறு

  தேய்பிறையில் பிறந்தவர்களுக்கு பஞ்ச பட்சி-மயில்

ஜென்ம நட்சத்திரம்

 திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம்

 வளர்பிறையில் பிறந்தவர் பஞ்ச பட்சி-ஆந்தை

 தேய்பிறையில் பிறந்தவர்களுக்கு பஞ்ச பட்சி-கோழி

ஜென்ம நட்சத்திரம்

 உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம்

வளர்பிறையில் பிறந்தவர் பஞ்ச பட்சி-காகம்

தேய்பிறையில் பிறந்தவர்களுக்கு பஞ்ச பட்சி-காகம்

ஜென்ம நட்சத்திரம்

 அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம்

வளர்பிறையில் பிறந்தவர் பஞ்சபட்சி-கோழி

தேய்பிறையில் பிறந்தவருக்கு பஞ்ச பட்சி-ஆந்தை

ஜென்ம நட்சத்திரம்

 திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி

வளர்பிறையில் பிறந்தவர் பஞ்ச பட்சி-மயில்

தேய்பிறையில் பிறந்தவர்களுக்கு பஞ்ச பட்சி-வல்லூறு

பஞ்சபட்சி

ஜென்மம் ஜென்ம நட்சத்திரம் தெரியாதவர்களுக்கு பெயரின் ஒலியை வைத்து பஞ்ச பட்சியை அறிய வேண்டும்.

அ,ஆ -வல்லூறு (அன்பழகன்,ஆனந்தன்,கதிர்வேலு,காளியப்பன்)

இ,ஈ-ஆந்தை(இனியன்,ஈஸ்வரன்,மீனாட்சி,கிருஷ்ணன்)

எ,ஏ -கோழி (எழிலரசன்,ஏகாம்பரம்,செல்லையா,சேதுராமன்)

ஓ,ஓ -மயில் (சொக்கன் ,கோவிந்தன்)

பஞ்ச பட்சி நேர அட்டவணை

ஜாமம் பகல் மணி இரவு மணி
1ம் ஜாமம் 06:00முதல் 08:24வரை 06:00முதல் 08:24வரை
2ம் ஜாமம் 08:25முதல் 10:48 வரை 08:25முதல் 10:48 வரை
3ம் ஜாமம் 10:49முதல் 01:12 வரை 10:49முதல் 01:12 வரை
4ம் ஜாமம் 01:13முதல் 03:36வரை 01:13முதல் 03:36வரை
5ம் ஜாமம் 03:37முதல் 06:00வரை 03:37முதல் 06:00வரை

உங்களுடைய நட்சத்திர பட்சி அரசு ,ஊண் ஆகிய தொழில்களை செய்யும் போது பயிரிடுதல் ,ஆடு ,மாடு ,வாகனம் வாங்குதல்,விற்றல்,உத்தியோகம்,வர்த்தகம் செய்தல்,பகை வெல்லல்,தர்மம் செய்தல்,அரசரைக் காணல்,பிரயாணம் செய்தல்,ஆகிய சுப காரியங்களை செய்யின் உத்தம பலன் உண்டாகும்.

பஞ்ச பட்ச தொழிலுக்கான பலன்கள்

அரசு மிக நன்மையான நேரம்
ஊண் நடுத்தரமான நன்மையான பலன்
நடை தாமதமான சுப பலன்
துயில் காரியத்தடை
மரணம் காரிய நாசம் ,அதம பலன்,நச்சு நேரம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular