ரோகிணி நட்சத்திரம்
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்
சந்திரன்,சுக்கிரன் தொடர்புள்ள நட்சத்திரம். உரோகிணி என்னும் பெயர் உண்டு. நீண்ட ஆயுள் உள்ளவர். உட்புற விளையாட்டுகளால் லாபம் உண்டு. இவர்கள் காசிக்கயிறு அணிவதால் இடருறுவர்.வேடிக்கையாக பேசுவதால் இடருறுவர். கோவிலுக்கு வசூல் செய்வதால்இடருறுவர், நெடுஞ்சாலை, குடிநீர் வாரியம், பொதுப்பணித்துறை தொடர்பு உண்டு. குளிர்ந்த மனமுள்ளவர்.
சமத்துவமாய் பழகுவதால் இருபாலர் வெறுப்புக்கு ஆளாவார். பிறருக்கு நல்லுபதேசம் செய்வார். ஜப்பான், ஹாங்காங் தொடர்பை உண்டாக்கும். பணமுடை உண்டு.கூட்டுறவு ,பண்டகசாலை முதல்வராவார்.
கடல் தாண்டும் யோகம் உண்டு. தாயாரை பெயரை சொல்லி அழைப்பதும், மனைவி/ கணவரை திட்டும் சுபாவமும் உண்டு.
முதுநிலை வணிக மேலாண்மை படிப்பு அமையும். பொறியியல் கல்வி அமையும். சுயம்வரத் திருமணம். பாம்பு அமைப்பு உள்ளது. பகவான்கிருஷ்ணர் நட்சத்திரம். கடை வீதியில் வீடு அமையும். கலெக்டர் அலுவலக தொடர்பு உண்டாகும்.
நல்ல அழகிய உடல் அமைப்பும் புத்திசாலியாகவும் இருப்பார்கள்.மிகுந்த சாமர்த்தியசாலியாகவும் திகழ்வீர்கள்.தண்ணீர் சார்ந்த துறைகளால் லாபம் எய்துபவர்கள்.எல்லோருக்கும் உதவும் மனப்பான்மை உடையவர்கள்.விவசாயம் மூலம் வருமானம் கிடைக்கும்.சௌபாக்கியத்துடன் வாழ கூடியவர்கள்.நேர்மையான மற்றும் பிடிவாத குணமும் கொண்டவர்கள்.மற்றவர்களை சார்ந்து வாழ கூடியவர்கள்.
ரோகினி நட்சத்திரம் பற்றிய தகவல்கள்
நட்சத்திரத்தின் ராசி : ரிஷபம்
நட்சத்திரத்தின் அதிபதி : சந்திரன்
ராசி அதிபதி : சுக்கிரன்
நட்சத்திர நாம எழுத்துக்கள் :ஓ-வ-வி-வு
கணம் :மனுஷ கணம்
மிருகம் : ஆண் நாகம்
பட்சி :ஆந்தை
மரம் :நாவல்
நாடி :வாம பார்சுவ நாடி
ரஜ்ஜு :ஏறு கழுத்து
ரோகினி நட்சத்திரம் முதல் பாதம்
தோற்ற பொலிவு கொண்டவர்கள்.வைராக்கியம் உடையவர்கள்.வறட்டு பிடிவாதம் உடையவர்கள்.ஊர் ஊராக சுற்ற கூடியவர்கள்
ரோகினி நட்சத்திரம் இரண்டாம் பாதம்
இரக்க குணம் கொண்டவர்கள்.பெண்களிடன் நேசம் கொண்டவர்கள்.மன அமைதி அடையக்கூடிய நற்குணவான்.ஆடம்பர வாழ்க்கை வாழ முயற்சி செய்ய கூடியவர்கள்
ரோகினி நட்சத்திரம் மூன்றாம் பாதம்:
புத்தி கூர்மை உடையவர்கள்.கல்வியில் விருப்பம் கொண்டவர்கள்.கவிதை காவியங்களில் விருப்பம் கொண்டவர்கள்.பல கலைகளை கற்ற சாதுர்யமான சாமர்த்தியசாலிகள் .
ரோகினி நட்சத்திரம் நான்காம் பாதம்
எளிதில் உணர்ச்சி வச பட கூடியவர்கள்.அலை பாயும் மனம் கொண்டவர்கள்.கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவர்கள்.
I have rohini nakshtra
சிறப்பு